fbpx

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு…!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பூமத்திய ரேகையையொட்டிய இந்தியப் பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். வரும் 3 முதல் 6-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், 7-ம் தேதி கடலோர மாவட்டங்களிலும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் நிலவும். தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

English Summary

Atmospheric low pressure circulation.. Chance of rain in Tamil Nadu for the next 6 days

Vignesh

Next Post

தமிழகத்தில் இன்று (02-01-2025) மின்தடை ஏற்படும் பகுதிகள்..! உங்க ஏரியாவும் லிஸ்ட்ல இருக்கா…! முழு விவரம்…

Thu Jan 2 , 2025
Areas of power cut in Tamil Nadu today (02-01-2025)..! Is your area also in the list...! Full Details...

You May Like