fbpx

ஆம்புலன்ஸில் ஏறி அட்ராசிட்டி..!! கடைசியில இப்படியா..? மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் எத்தனை தெரியுமா..?

இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதியில் முதல் சுற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் 41 வாக்குகள் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் ஆரம்பம் முதலே வேலூர் தொகுதியில் தங்கியிருந்து கடை கடையாக சுற்றி வந்தார் மன்சூர். இறுதிக்கட்ட பிரச்சாரம் முடிந்த நிலையில், மயங்கி விழுந்து ஆம்புலன்ஸில் எல்லாம் ஏறி, தனக்கு எதிராக சதி நடப்பதாக கூறினார்.

வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, அணைக்கட்டு, கே.வி. குப்பம், குடியாத்தம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கியுள்ள வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அதிமுக சார்பில் பசுபதியும், பாஜக சார்பில் ஏசி சண்முகமும், நாம் தமிழர் சார்பில் மகேஷ் ஆனந்தும் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் சுயேட்சையாக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிட்டார்.

இந்நிலையில், வேலூரில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் முதல் சுற்றில் 41 வாக்குகள் பெற்றிருந்தார். இரண்டு சுற்றுகளில் மொத்தம் 350 வாக்குகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : தொடர்ந்து 10 தேர்தல்களில் தோல்வி..!! எடப்பாடிக்கு எதிராக உருவாகும் கொங்கு டீம்..!! கடைசியில இப்படி ஆகிடுச்சே..!!

English Summary

As the counting of votes started this morning, in the first round of votes counted in the Vellore Lok Sabha constituency, actor Mansoor Alikhan got a shocking 41 votes.

Chella

Next Post

தேர்தல் முடிவு தலைகீழாக மாற ஷாருக்கான் தான் காரணமா..? வைரலாகும் பதிவு..!!

Tue Jun 4 , 2024
Shah Rukh Khan is not associated with any party in any way. However, comments are being made that his line in the climax of the movie Jawaan, "Vote for the right person", had an impact on the outcome of the election.

You May Like