தேர்தல் முடிவு தலைகீழாக மாற ஷாருக்கான் தான் காரணமா..? வைரலாகும் பதிவு..!!

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் அதற்கு முற்றிலும் மாறாக வெளியாகி வருகின்றன. இதனால், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இந்தியக் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த போட்டிக்கு நடிகர் ஷாருக்கான் காரணம் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஷாருக்கான் எந்தக் கட்சியுடனும் எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை. ஆனால், ஜவான் படத்தின் கிளைமேக்ஸில் சரியான நபருக்கு ஓட்டுப்போடுங்கள் என்று அவர் பேசிய வசனம், தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கருத்து பதிவிட்டு வருகின்றனர். “பயம், பணம், ஜாதி, மதம், சமூகம் ஆகியவற்றைக் கண்டு வாக்களிப்பதற்குப் பதிலாக, உங்கள் வாக்கு கேட்க வந்தவர்களிடம் கேள்விகளைக் கேளுங்கள். அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் உங்களுக்கு என்ன செய்வார்கள் என்று கேளுங்கள். உங்கள் குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டால், சிகிச்சைக்கு அவர்கள் எப்படி உதவுவார்கள்? என்று ஜவான் படத்தில் வசனம் இடம்பெற்றிருக்கும்.

ஜவான் படத்தின் ஷாருக்கான் பேசும் புகைப்படத்தை பகிர்ந்த ஒரு பயனர், “லோக்சபா தேர்தல் 2024-க்கு முன்னர் ஜவான் இந்த சிறந்த படத்திற்கு அனைத்து இந்திய அரசியல் வாதிகளும் ஷாருக்கானுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், “ஷாருக்கானின் ஜவான் படத்தின் பங்களிப்பை நாம் மறந்துவிடக் கூடாது. அரசாங்கத்தின் காலடியில் விழாத கிங் கானுக்கு சல்யூட், ஜவான் படம் பலரின் மனதைத் திறந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More : ஆம்புலன்ஸில் ஏறி அட்ராசிட்டி..!! கடைசியில இப்படியா..? மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் எத்தனை தெரியுமா..?

English Summary

Shah Rukh Khan is not associated with any party in any way. However, comments are being made that his line in the climax of the movie Jawaan, “Vote for the right person”, had an impact on the outcome of the election.

Chella

Next Post

வாரணாசியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார் பிரதமர் மோடி..!

Tue Jun 4 , 2024
Prime Minister Modi won in Varanasi for the third time in a row..!

You May Like