fbpx

தஞ்சை அருகே…..! மணல் கடத்தலை தடுக்க முயற்சித்த 2 காவலர்கள் மீது வாகனத்தை மோதி கொலை செய்ய முயற்சி ஓட்டுநர் தலைமறைவு…..!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள காட்டாற்றில் அதிக அளவில் மணல் திருட்டு நடைபெற்று வருவதாக புதுக்கோட்டை தாலுகா காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு காவலர்கள் சரவணன், சதீஷ்குமார் உள்ளிட்ட இருவரும் இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அந்த சமயத்தில் பட்டுக்கோட்டை அருகே கார்கா வயல் பகுதியில் மணல் அள்ளிக்கொண்டு அதிவேகமாக வந்த சுமை ஆட்டோவை ஆய்வு செய்வதற்காக காவலர்களான சரவணன் மற்றும் சதீஷ் வழிமறித்தனர். ஆனால் சுமை ஆட்டோவில் வந்தவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் 2 காவலர்கள் மீதும் மோதிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதில் சரவணன் மற்றும் சதீஷ்குமார் உள்ளிட்ட இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவர்களை நினைத்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் கொலை முயற்சி உட்பட 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் காவல்துறையினர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற சுமை ஆட்டோவின் உரிமையாளர் பண்ணவயல் கிராமத்தைச் சேர்ந்த ராஜா(31) என்பது தெரியவந்தது. ராஜாவை காவல்துறையினர் கைது செய்தனர் மேலும் அந்த ஆட்டோவை பறிமுதல் செய்த காவல்துறையினர் ஓட்டுநர் நிஷாந்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Post

சென்னையில் பெண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பி தொல்லை…..! செய்த காவலர் அதிரடி பணியிடை நீக்கம்…..!

Wed May 31 , 2023
சென்னை செம்பியம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சார்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண்மணி வருவார் நிலப்பிரச்சனையின் காரணமாக, புகார் வழங்குவதற்காக செந்தியும் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த முதல் நிலை காவலர் வினோத்குமார் (32) என்பவர் புகார் தொடர்பாக விசாரித்து அந்த பெண்ணிடம் அவருடைய கைபேசி எண்ணையும் வாங்கிக் கொண்டார். பின்னர் காவலர் வினோத்குமார் தவறான நோக்கத்துடன் அந்த பெண்ணுக்கு குறுந்தகவல்களை அனுப்பி இருக்கின்றார். மேலும் […]

You May Like