ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகைப் பதிவேடு EMIS Portal லில் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பள்ளிகளில் பதிவேடுகள் அனைத்தும் கணினி மயமாக்குதல் மற்றும் தேவையற்ற பணிப்பதிவேடுகள் நீக்குதல் தொடர்பாக அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கிட தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணைச்செயல்முறைகளின் படி தெரிவிக்கப்பட்டுள்ளதை 20.06.2023 அன்று அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்டக்கல்வி அலுவலர்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தற்போது வரை பள்ளிகளில் ஆசிரியர் வருகைப் பதிவேடு நடைமுறையில் உள்ளது வருந்தத்தக்கது. ஆகவே இனிவரும் காலங்களில் ஆசிரியர் வருகைப் பதிவினை EMIS ல் பதிவுடவும், இணைப்பில் கண்ட செயல்முறையைப் பின்பற்றியும் செயல்பட அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெவிக்கப்படுகிறது.