fbpx

10-ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு…! செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்ய மீண்டும் மறுவாய்ப்பு…! முழு விவரம்

10-ம் வகுப்பு தனித் தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சிக்கு பதிவு செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில்; நடப்பு கல்வியாண்டில் 10-ம் வகுப்புபொதுத் தேர்வு ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வெழுத விரும்பும் தனித் தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சிக்கு பதிவு செய்ய ஆகஸ்ட் 10 முதல் 21-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டது. தற்போது தேர்வர்களின் நலன் கருதி செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்ய மீண்டும் மறுவாய்ப்பு வழங்கப்படுகிறது. இதையடுத்து அனைத்து தனித்தேர்வர்களும் நவம்பர் 10-ம் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களில் நேரில் சென்று தங்களின் பெயரை பதிவுசெய்து கொள்ள வேண்டும்.

தங்களுக்கு வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு எழுத்துத் தேர்வுக்கான பதிவு தொடங்கும்போது தனித்தேர்வர்கள் இந்த ஒப்புகைச்சீட்டு மற்றும் முன்பு தேர்வு எழுதிய மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும், பதிவு செய்த பின்னர் சேவை மையத்தால் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில்உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்ய இயலும். மேலும், கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தூள்...! அரசு சார்பில் UPSC பயிற்சி... முதன்மைத் தேர்வு பயிலும் ஆர்வலர்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும்...!

Tue Nov 7 , 2023
அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம் யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சியை நடத்தி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் நுழைவுத் தேர்வு நடத்தி 325 ஆர்வலர்கள் (225 முழுநேர மற்றும் 100 பகுதிநேர ஆர்வலர்கள்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர், யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆர்வலர்களுக்கு முதன்மைத் தேர்வை எதிர்கொள்ள மூன்று மாதங்களுக்கு (ஜூலை முதல் செப்டம்பர் வரை) தீவிர […]

You May Like