H3N2 இன்புளுயன்ஸா காய்ச்சலால் இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது..
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பல புதிய நோய்கள் பரவி வருகின்றன.. அந்த வகையில், சமீபத்தில், இன்ஃப்ளூயன்ஸா H3N2 வைரஸ் காய்ச்சல் பரவல் நாட்டில் புதிய எச்சரிக்கையாக உள்ளது. நாட்டின் பல்வேறு நகரங்களில் H3N2 பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.. இந்த புதிய வைரஸ், மக்களுக்கு பல்வேறு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. கடந்த சில மாதங்களாக H3N2 வைரஸ் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் என்ணிக்கை அதிகரித்துள்ளது..

இந்நிலையில் H3N2 இன்புளுயன்ஸா காய்ச்சலால் இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.. கர்நாடகா, ஹரியானா மாநிலங்களில் H3N2 இன்புளூயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேர் இறந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.. மேலும் நாடு முழுவதும் H3N2 இன்புளூயன்ஸா காய்ச்சலால் 90 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் சுயமாக மருந்துகளை எடுக்காமல் உடனே மருத்துவர்களை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..
H3N2 அறிகுறிகள்
- சளி
- இருமல்
- காய்ச்சல்
- குமட்டல்
- வாந்தி
- தொண்டை வலி
- உடல் ஒரு வலி
- வயிற்றுப்போக்கு
- தும்மல்
H3N2 எவ்வாறு பரவுகிறது.. ? H3N2 மிகவும் வேகமாக பரவும் தொற்று நோயாகும். இந்த வைரஸால் பாதிக்கப்படும் நபர்களுக்கு 4-5 நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் நீடிக்கிறது.. மேலும் இருமல், குமட்டல், வாந்தி, தொண்டை புண் மற்றும் உடல் வலி போன்ற அறிகுறிகுளும் ஏற்படுகிறது.. இந்த வைரஸ் காய்ச்சலில் இருந்து முழுமையாக குணமடைய 3 வாரங்கள் வரை ஆகிறது…
எப்படி தடுப்பது? H3N2 இன்புளூயன்ஸாவைத் தடுக்க, ஒவ்வொரு வருடமும் தடுப்பூசி போடுவது அவசியம்.. மேலும், அடிக்கடி சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளைக் கழுவ வேண்டும். நெரிசலான இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.. நோய்வாய்ப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.. தும்மும்போது அல்லது இருமும்போது வாய் மற்றும் மூக்கை மூட வேண்டும்.. உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது பள்ளி அல்லது அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.. மருத்துவர்களுடன் முறையான ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.