fbpx

கவனம்!. இந்த தவறுகளால் EPF க்ளெய்ம் நிராகரிப்பு!. காரணங்கள் இதோ!

EPFO: உழைக்கும் மக்களுக்கு, அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க ஒவ்வொரு மாதமும் ஊதியத்தில் ஒரு பகுதி வருங்கால வைப்பு நிதிக்குச் செல்வது மிகவும் முக்கியம். இந்தப் பணத்தின் நிர்வாகம் EPFO ​​விடம் உள்ளது. இருப்பினும், தேவைப்படும்போது பணத்தை எடுக்கும்போது, ​​உங்களின் EPF கோரிக்கை பலமுறை நிராகரிக்கப்படுவதற்கு இந்த சிறிய தவறுகளே காரணமாக உள்ளது. அது என்ன என்பது குறித்தும், மீண்டும் துபோன்ற பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

உரிமைகோரலை நிராகரிக்கும் போது பல நேரங்களில் EPFO ​​போர்டல் உங்களுக்கு முழுமையான விவரங்களை தருவதில்லை. முழுமையடையாத ஆவணங்கள் வழங்கப்பட்டன அல்லது தகவல் கொடுப்பதில் தவறுகள் நடந்துள்ளன என்பது மட்டுமே அவர்கள் அளித்த தகவலாக இருக்கும். இதன் காரணமாக எங்கு தவறு நடந்தது என்பது உங்களுக்கு முழுமையாக புரியவில்லை. இதனால் EPFO சந்தாதாரருக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கூட புரியாமல் குழப்பத்தில் இருப்பார்கள்.

EPFO ​​கோரிக்கைகள் நிராகரிப்பு காரணங்கள்: முழுமையற்ற KYC, UAN உடன் ஆதார் அட்டையை இணைக்காதது மற்றும் பெயர் மற்றும் பிறந்த தேதியில் தவறு இருந்தாலும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். EPFO பதிவுகள் மற்றும் படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள UAN இன் பொருத்தமின்மை, சேர்ந்த தேதியும், வெளியேறும் தேதியும் பதிவுகளிலிருந்து வேறுபட்டது, தவறான நிறுவன விவரங்களை நிரப்புதல், தவறான வங்கி கணக்கு விவரங்கள், உரிமைகோரல் படிவத்தை பூர்த்தி செய்யும் போது நடக்கும் தவறுகள், EPS பரிமாற்ற தோல்வி, இபிஎஸ் கணக்கு சரியாக இல்லை (அடிப்படை சம்பளம் ரூ 15 ஆயிரத்திற்கு மேல்) உள்ளிட்ட காரணங்களாக EPFO ​​கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன.

எப்படி தவிர்ப்பது?. EPFO பதிவுகள் மற்றும் ஆதார் தரவுகளை சரிபார்க்கவும், ஆதார் அட்டையுடன் UAN ஐ இணைக்கவும், PF நியமனத்தைப் புதுப்பிக்கவும், முந்தைய வேலைகளின் பதிவுகளைப் புதுப்பிக்கவும், அனைத்து வங்கி கணக்கு தகவல்களையும் சரிபார்க்கவும், ஓய்வூதிய சான்றிதழ் பெற உரிமைகோரலைச் சமர்ப்பிக்கும் முன் ஒவ்வொரு தகவலையும் கவனமாகச் சரிபார்க்கவும் , சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களின் நகல்களையும் வைத்திருக்கவேண்டும்.

Readmore: இஸ்ரேல் குண்டுவீச்சு!. 500-ஐ நெருங்கிய பலி எண்ணிக்கை!. 1,500-க்கும் மேற்பட்டோர் காயம்!. ஐ.நா. கவலை!

English Summary

Attention!. EPF claim rejection due to these mistakes!. Here are the reasons!

Kokila

Next Post

கல்வி நிறுவனங்கள் கவனத்திற்கு... நவம்பர் 10-ம் தேதி வரை கால அவகாசம்...! உடனே இதை செய்து முடிக்கவும்

Tue Sep 24 , 2024
Attention educational institutes... Time limit till 10th November

You May Like