டிவி அருகில் இருக்கும் செட்டாப் பாக்ஸை இழுத்து கையில் வைக்க முயற்சித்த குழந்தை, மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் தந்தையுடன் 4 வயது சிறுவன், வீட்டில் உள்ள டிவியில் கார்ட்டூன் பார்த்து கொண்டிருந்தபோது அசதியில் தந்தை தூங்கியிருக்கிறார், மகிழ்ச்சியுடன் டிவி பார்த்துக்கொண்டிருந்த குழந்தை, ஒருகட்டத்தில் டிவி அருகில் இருந்த செட்டாப் பாக்ஸை கை வைத்து இழுத்தபோது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளான். சிறிது நேரம் கழித்து சிறுவன் தரையில் மயங்கிக் கிடப்பதைக் கவனித்த தந்தை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார், அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்,
செட்டாப் பாக்ஸை இழுக்க முயற்சித்து மின்சாரம் தாக்கி, குழந்தை பலியான சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடைப்பெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிவி பார்த்துக்கொண்டிருந்த குழந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.