முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நாட்கள் நிர்வாக காரணங்களுக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை பயிற்சி – முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிர்வாக காரணங்களின் பொருட்டு இன்று முதல் 14.09.2023 நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ஆசிரியர் தேர்வு வாரியத்தால், நடத்தப்பெறும் வட்டாரக் கல்வி அலுவலர் பதவிக்கான நேரடி நியமனத்திற்கான தேர்வு 10.09.2023 அன்று நடைபெற இருந்தது. நிர்வாகக் காரணங்களின் பொருட்டு, தேதி மாற்றம் செய்யப்பட்டு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது இன்று முதல் 14.09.2023 முடிய 03 நாட்கள் மேற்குறிப்பிட்ட மையத்தில் நடைபெறும். எனவும், பயிற்சியில் பங்கேற்கும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் பயிற்சி துவங்குவதற்கு முன்னதாக பயிற்சிக்கு வந்து சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.