பள்ளி மாணவர்கள் பழைய பேருந்து பயண அட்டையை வைத்தே பயணிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு விடப்பட்ட கோடை விடுமுறை நாளையுடன் நிறைவு பெறுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் நாளைமறுநாள்(ஜூன் 10)ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்கு முன்னதாக ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கோடை வெயிலின் தாக்கம் இன்னுமே குறையாமல் இருப்பதால், மாணவர்களின் நலன் கருதி பள்ளி திறப்பை தமிழக அரசு ஒத்திவைத்தது. அதன் ஜூன் 10ஆம் தேதி அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பேருந்து அட்டை தொடர்பான முக்கிய செய்திக் குறிப்பு ஒன்றை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.
அதில், ” 2023-24 கல்வியாண்டின் பயண அட்டை, பள்ளி அடையாள அட்டை மூலம் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். அதே நேரத்தில் சீருடை அணிந்து இருப்பிடத்திலிருந்து பயிலும் பள்ளிகள் வரை மட்டுமே கட்டணம் இன்றி பயணிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை மறுநாள் மாணவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து மறக்காமல் எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More:‘பிக்பாஸ் காதல் ஜோடி விவாகரத்து!’ அதிர்ச்சியில் ரசிகர்கள்..!