தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைப்பெற்றது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், நடைபெற்ற பொதுத்தேர்வில் சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். அதன்படி 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 9.07% மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில் தற்போது 91.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 88.16%, மாணவிகள் 914.66% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருடமும் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்கள் மே 23ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் அன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆகவே மாணவர்கள் தோல்வியை கண்டு பயப்படாமல் அடுத்து வரும் துணைத்தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள்.