fbpx

ஆசிரியர்கள் கவனத்திற்கு..!! பொது மாறுதல் கலந்தாய்வு..!! தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை..!!

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூன் 14, 15ஆம் தேதிகளில் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், “உயர்நீதிமன்ற தீர்ப்பாணையை செயல்படுத்தும் வகையில் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முகமை மூலமாக ஜூனில் நடைபெறும். நடப்பாண்டு மட்டும் மாநில முன்னுரிமையின்படி கலந்தாய்வு நடத்தப்படும். இந்த கலந்தாய்வு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

அதன்படி, பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களை ஆசிரியர் பயிற்றுநர்கள் ஜூன் 10ஆம் தேதி மாலை 6 மணிக்குள் எமிஸ் தளம் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த விண்ணப்பங்களுக்கு ஜூன் 11ஆம் தேதி முதன்மைக் கல்வி அலுவலர் ஒப்புதல் வழங்க வேண்டும். அனைத்து வகை ஆசிரியர் பயிற்றுநர்களின் மாறுதல் கோரும் விண்ணப்பங்களின் முன்னுரிமை பட்டியல், காலிப் பணியிட விவரம் ஜூன் 12ஆம் தேதி

முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம், முறையீடுகள் ஏதும் இருப்பின் அதை ஜூன் 13ஆம் தேதி சரி செய்து இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியிட வேண்டும். பின்னர், ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான மாறுதல் வருவாய் மாவட்டத்துக்குள் ஜூன் 14ஆம் தேதியும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் ஜூன் 15ஆம் தேதியும் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ’மனைவியுடன் இப்படி உடலுறவு வைத்துக் கொண்டால் குற்றமாகாது’..!! உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் அதிர்ச்சி..!!

English Summary

The school education department has announced that the public transfer consultation for teacher trainers will be held on June 14 and 15.

Chella

Next Post

தலைநகரம் திரைப்பட நடிகையா இது..? இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்க தெரியுமா..? ஆளே அடையாளம் தெரியல..!!

Sun Jun 9 , 2024
Now you can see the latest information about the heroine of the film Capital in this post.

You May Like