தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் Executive officer Grade III (Group VIIB) & Grade lV (Group Vll) பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு இன்று மற்றும் நாளை முற்பகல் மற்றும் பிற்பகல் இருவேளைகளிலும் எழுதும் விவர்ணப்பதாரர்கள் கவனத்திற்கு. தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் செயல் அலுவலர் பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு இன்று முற்பகல் மற்றும் பிற்பகல் இருவேளைகளிலும் Grade lV (Group Vll) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நாளை முற்பகல் மற்றும் பிற்பகல் இருவேளைகளிலும் மொத்தம் 22 தேர்வு மையங்களில் நடைபெற இருக்கின்றன.
இத்தேர்வு மையங்களில் சுமார் 6,460 தேர்வர்கள் தேர்வு எழுதவிருக்கின்றனர். மேற்கண்ட தேர்வு மையங்களில் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களிலும் பேருந்துகள் நின்று செல்லும் வகையிலும், சிறப்பு பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் சூறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையத்திற்கு செல்லவும், கடைசி நேர அலைச்சல்களை தவிர்க்குமாறும், தேர்வாணைய விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்குமாறு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.