fbpx

கவனம்.. YouTube வீடியோக்கள் உங்கள் வங்கிக் கணக்கு எண், CVV, PIN நம்பரை திருடலாம்.. அதிர்ச்சி தகவல்..

உலகளவில் மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக யூ டியூப் (YouTube) உள்ளது.. கோடிக்கணக்கான பார்வையாளர்கள் யூ டியூபில் தங்களுக்கு தேவையான வீடியோக்களை பார்த்து ரசிக்கின்றனர்.. சுமார் 2.5 பில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர பயனர்களைக் கொண்ட பிரபலமான தளமாக யூ டியூப் உள்ளது. ஆனால், யூடியூப் வீடியோக்களில் தீங்கிழைக்கும் மால்வேர் இணைப்புகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த மால்வேர் வங்கிக் கணக்கு எண், CVV மற்றும் பின் போன்ற உங்கள் முக்கியமான நிதித் தரவைத் திருடலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது…

நீதிமன்ற தீர்ப்பு, அரசின் திட்டங்கள் குறித்து உருட்டிய யூடியூப் சேனல்கள்..!! மத்திய அரசு கடும் எச்சரிக்கை..!!

CloudSEK என்ற AI சைபர் செக்யூரிட்டி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில் இன் தகவல் வெளியாகி உள்ளது.. அந்த ஆய்வு முடிவில், யூ டியூப் வீடியோக்களில் 200-300% ஆபத்தான மால்வேர் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Infostealers என அழைக்கப்படும், இந்த மால்வேர்கள் தீங்கிழைக்கும் பதிவிறக்கங்கள், போலி இணையதளங்கள் மற்றும் யூ டியூப் பயிர்சிகள் ஆகியவை மூலம் பரவுகிறது.. இது சைபர் குற்றவாளிகளின் கண்டரோல் சர்வரில் பதிவேற்றப்படுகிறது.

யூ டியூபில், சராசரியாக ஒவ்வொரு நேரத்திற்கும் 5-10 கிராக் மென்பொருள் பதிவிறக்க வீடியோக்கள் தீங்கிழைக்கும் மால்வேர் இணைப்புகளுடன் பதிவேற்றப்படுகின்றன என்று அந்த ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.. அந்த மால்வேரை பயனர்கள், பதிவிறக்கும் வகையில், தவறாக வழிநடத்தும் ஏமாற்றும் தந்திரங்கள் வீடியோக்களில் உள்ளன என்றும்.. ஆனால் அடையாளம் கண்டு அகற்றுவது YouTube அல்காரிதத்திற்கு சவாலாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

நவம்பர் 2022 முதல் YouTube வீடியோக்களில் Vidar, RedLine, Raccoon போன்ற திருட்டு தீம்பொருளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவை கடவுச்சொற்கள், கிரெடிட் கார்டு தகவல், வங்கி கணக்கு எண்கள் மற்றும் பிற ரகசியத் தரவைத் திருடலாம் என்று தெரிவித்துள்ளனர்… Adobe Photoshop, Premiere Pro, Autodesk 3ds Max, AutoCAD போன்ற உரிமம் பெற்ற மென்பொருளின் கிராக் செய்யப்பட்ட பதிப்புகளைப் பதிவிறக்குவதற்கான பயிற்சிகளாக (tutorials) இந்த வீடியோக்கள் காட்டுகின்றன, அவை பணம் செலுத்தும் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.. இதன் மூலம் வங்கி தொடர்பான தகவல், பிற தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

ஒரே நாளில் ரூ.520 உயர்ந்த தங்கம் விலை.. 3 நாட்களில் ரூ.1,600 உயர்ந்ததால் அதிர்ச்சியில் பெண்கள்...

Tue Mar 14 , 2023
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.43,120க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. எனவே தங்கம் விலை […]
தங்கம்

You May Like