பொதுவாகவே, நமது கலாச்சாரத்தின் படி, டிபன் என்றாலே அது இட்லி அல்லது தோசை தான். விசேஷ நாட்கள் அல்லது விடுமுறை நாட்களில், சிறப்பு உணவாக சப்பாத்தி, பூரி அல்லது பொங்கல் இருக்கும். இட்லி அல்லது தோசை கெட்ட உணவு கிடையாது. நமது செரிமானத்திற்கு மிகவும் உதவும் ஒரு அற்புத உணவு தான். ஆனால், அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தான். ஆம், இட்லி அல்லது தோசையை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை சாப்பிடலாம். ஆனால், தினமும் இட்லி தோசையை மட்டுமே சாப்பிட்டு வந்தால், நன்மையை விட தீமைகள் தான் அதிகம்.
குறிப்பாக, 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெறும் இட்லி அல்லது தோசையை மட்டுமே சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு உடலில் பெலன் இல்லாமல் போய் விடும். இதனால் முடிந்த வரை, அவர்கள் காலை உணவாக முளைகட்டிய பயிர், கொண்டக்கடலை, முட்டை, பால் பன்னீர், கொஞ்சம் பாதாம் ஆகியவற்றை சாப்பிடலாம். காலை உணவை இப்படி சாப்பிட்டு வந்தால், சர்க்கரையை கட்டுப்படுத்துவது மட்டும் இல்லாமல், சர்க்கரை நோய் வராமலும் தடுக்க முடியும். ஆய்வின் படி, தமிழகத்தில் 1 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் அதில் 10% பேர் தான் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தாவிட்டால், மாரடைப்பு, புற்றுநோய், சிறுநீரக கோளாறு போன்ற நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதனால், சர்க்கரை நோயாளிகள் இட்லி சாப்பிட கூடாது. ஒரு வேலை நீங்கள் விரும்பினால் வாரம் ஒரு முறை, 2 இட்லி அதிக சாம்பார் ஊற்றி சாப்பிடலாம். மற்ற உணவுகளை விட, காலை உணவு மிக முக்கியமான ஒன்று என்பதால், அதனை கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.
Read more: சமைப்பதற்கு முன்பு, அரிசியை தண்ணீரில் ஊற வைப்பவரா நீங்கள்? அப்போ கட்டாயம் இதை படியுங்க..