கார்த்திகை மாதம் என்றாலே சபரிமலை ஐயப்பன் தான் கண் முன் வருவார். அந்த வகையில் கேரளா மாநிலத்திற்கு இந்தியாவில் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சபரிமலை பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
சபரிமலை பயணத்தில் ஐயப்பனை காண வரும் பக்தர்களுக்கு சரியான வசதிகளை உறுதி செய்யுமாறு திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கும் கொச்சி தேவஸ்தானத்திற்கும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
மேலும், சபரிமலை சிறப்பு ஆணையர் அவர்களின் மனுவை ஏற்று உயர்நீதிமன்றம் விசாரணை செய்த பின்னரே இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.