கோவையைச் சார்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர் தனது கணவரும் மாமனாரும் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக கூறி அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தில் கோரிக்கை மனுவை சமர்ப்பித்திருக்கிறார். கோவை மாவட்டத்தைச் சார்ந்த 25 வயதுடைய இளம் பெண், பிடெக் பட்டதாரியான இவரை அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த இளம் பெண்ணுக்கும், சொந்தமாக தொழில்நுட்ப நிறுவனம் நடத்தி வரும் கோவையைச் சார்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது பெண்ணிற்கு 100 சவரன் நகை மற்றும் 25 கிலோ வெள்ளி பொருட்கள் சீர்வரிசையாக கொடுக்கப்பட்டன. திருமணமான பின்பு தான் அந்த இளைஞர் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர் என இந்த பெண்ணிற்கு தெரிந்திருக்கிறது. கஞ்சா பழக்கத்தால் அந்த இளைஞரால் தாம்பத்திய உறவில் கூட ஈடுபட முடியாது. கஞ்சா போதைக்கு அடிமையான அந்த இளைஞர் இயற்கைக்கு மாறான உறவு முறைகளில் ஈடுபடச் சொல்லி இந்த பெண்ணை வற்புறுத்தி இருக்கிறார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்திருக்கிறார் அந்த பெண்.
இதனிடையே உறவினர் ஒருவரின் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள சென்றபோது குளித்துவிட்டு ஆடை மாற்றிக் கொண்டிருந்த தனது மனைவியை செல்போனின் மூலம் நிர்வாணமாக படம் எடுத்திருக்கிறார் அந்த இளைஞர். இதனைக் கண்டு பிடிக்க அந்த பெண் தனது அறையில் இருந்து வெளியே ஓடி இருக்கிறார். அப்போது அவரின் மாமனாரும் மாமியாரும் அந்தப் பெண்ணை நிர்வாணமாக தர தரவென்று இழுத்துச் சென்று அறைக்குள் தள்ளி பூட்டி இருக்கின்றனர். இது போன்ற ஒரு நரக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்திருக்கிறார் அந்த பெண். கடந்த 2022 ஆம் ஆண்டு தனது நண்பரின் கார் ஷெட்டிற்கு தனது மனைவியை அழைத்துச் சென்ற அந்த இளைஞர், தான் எடுத்த புகைப்படங்களை காட்டி அவரது நண்பர்களுடன் இயற்கைக்கு மாறான முறையில் உறவு வைத்துக் கொள்ள இந்த பெண்ணை நிர்பந்தித்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அங்கிருந்து தப்பி வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரினை காவல்துறை விசாரிக்காமல் காலம் தாழ்த்தி இருக்கிறது. கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த போதும் புகாரின் மீது சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தை நாடிய அந்த பெண் தனது கணவர் மற்றும் மாமனாரை கைது செய்ய வேண்டும் எனவும் தன்னுடைய நிர்வாண படங்களை அழிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.