fbpx

கழிவறையில் பிறந்த குழந்தை..!! ஜன்னல் வழியாக தூக்கி வீசிய தாய்..!! விசாரணையில் அதிர்ச்சி..!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கஸ்பா பகுதியில் கணவருடன் வசித்துவரும் பெண்ணுக்கு கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே அந்த பெண் அவரது வீட்டில் உள்ள கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். அப்போது குழந்தை அழுது கொண்டே இருந்ததால், பெற்றோருக்கு தெரியாமல் இருக்க கழிவறையில் இருந்த கண்ணாடி ஜன்னல்களை உடைத்து தன்னுடைய குழந்தையைத் தூக்கி வெளியே எறிந்துள்ளார். இதுகுறித்து சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அங்கு கழிவறைகள் ரத்த வெள்ளத்தில் அந்த பெண் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் அந்தப் பெண்ணையும், குழந்தையையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில், அந்த பச்சிளம் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த பெண் கர்ப்பமாக இருந்தது அவருக்கே தெரியாது என்று தெரியவந்துள்ளது. தற்போது அந்தப் பெண் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக இதே போல் மும்பை மருத்துவமனையில் தீபிகா என்பவர் மூன்றரை மாத இரட்டைக் குழந்தைகளைச் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இரண்டு குழந்தைகளும் குறைப் பிரசவத்தில் பிறந்துள்ளது. திடீரென தனது பெண் குழந்தையைக் காணவில்லை என தீபிகா கூச்சலிட்டுள்ளார்.

இது குறித்து அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம் சிசிடிவியை ஆய்வு செய்துள்ளனர். அப்போது தீபிகா தனது பெண் குழந்தையை டவலில் சுற்றி கழிவறைக்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது. வெளியே வரும்போது அவரது கையில் குழந்தை இல்லை. இது குறித்து தீபிகாவிடம் விசாரணை மேற்கொண்ட போது, அந்தப் பெண் குழந்தையை ஜன்னல் வழியாக தீபிகா வெளியே தூக்கி இருந்ததாக அவரே ஒப்புக்கொண்டார். அதற்குப் பிறகு மருத்துவமனை ஊழியர்கள் அந்த குழந்தையை மீட்டனர். வெளியே தூக்கி எறியப்பட்ட குழந்தையின் தலையில் எலிகள் கடித்து காயங்கள் ஏற்பட்டிருந்தன. இதன் தீவிரத்தால் அந்த பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

திருச்சியில் உருகிய பன்னீர்செல்வம்…..! சசிகலாவின் பக்கம் சாய்கிறாரா ஓபிஎஸ்….?

Tue Apr 25 , 2023
திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் அதிமுக கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா என்று முப்பெரும் விழா மாநாடு நடந்தது. ஓபிஎஸ் அணியின் சார்பாக நடைபெற்ற இந்த மாநாட்டில் 25,000க்கும் அதிகமானோர் பங்கேற்றுக் கொண்டனர். அதிமுகவின் சின்னம் மற்றும் கொடியை பயன்படுத்துவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் தரப்பில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தாலும் இந்த மாநாட்டில் அதிமுக கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தனர். மாநாட்டில் […]

You May Like