திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள காட்டூரில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றின் கழிவறையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து குழந்தை எப்படி அங்கு வந்திருக்கும் என்பது குறித்து பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆதிதிராவிடர் நலத்துறையின் தனி தாசில்தாரான சந்திர தேவநாதன் என்பவரும் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளியில் விசாரணை செய்து வருகின்றனர்.