fbpx

பெற்றோர்களே கவனம்!!! அங்கன்வாடியில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தை உயிரிழப்பு..

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கபின். இவரது மனைவி ஏஞ்சலின் ருபீஸியா. இவர்களுக்கு சுஜன் என்ற நான்கு மாதக் குழந்தை உள்ளது. இந்நிலையில், முத்தாண்டிபாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நேற்று குழந்தை சுஜனுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை, குழந்தை சுஜன் எந்த அசைவும் இல்லாமல் இருந்துள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், குழந்தையை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை சுஜன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், குழந்தை சுஜனின் உடலைப் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள், “குழந்தை சுஜனுக்கு இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட குழந்தைகளுக்குக் காய்ச்சல் வருவது வழக்கம். அதே போன்று குழந்தை சுஜனுக்கும் காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது.

காலையில் தாய் ஏஞ்சலின் ருபீஸியா சுஜனுக்குப் பால் கொடுத்திருக்கிறார். பின்னர், சிறிது நேரத்தில் குழந்தை உயிரிழந்திருக்கிறது. தடுப்பூசி செலுத்தியதால் குழந்தை உயிரிழந்ததா அல்லது வேறு காரணமா என்பது பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவில்தான் தெரியவரும்” என்றனர்.

Maha

Next Post

"சந்திரயான் 3" நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கவில்லை! - சீனாவின் மூத்த விஞ்ஞானி தகவல்…

Thu Sep 28 , 2023
நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 தரையிறங்கவில்லை என்றும் தென் துருவத்திலிருந்து 619 கிலோமீட்டர் தொலைவில் தரை இறங்கியதாகவும் சீனாவின் மூத்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார். இந்தியாவின் சார்பாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 3 விண்கலம். இந்த விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது. அதிலிருந்து வெளிவந்த […]

You May Like