fbpx

பாலகோட் வான்வழித் தாக்குதல் நினைவு தினம் இன்று : புல்வாமா தாக்குதலுக்கு பழிவாங்கிய இந்தியா..

பாலகோட் வான்வழித் தாக்குதலின் 4வது நினைவு தினம் இன்று. பாகிஸ்தானின் பாலகோட்டில் 2019 ஆம் ஆண்டு இதே நாளில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படை வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்தியாவுக்கு எதிரான கொடூரமான புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த வான்வழி தாக்குதல் திட்டமிடப்பட்டது.. இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாக நீடித்த ஒரு துல்லியமான மற்றும் விரைவான வான்வழித் தாக்குதலில், பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமதுவின் மிகப்பெரிய பயிற்சி முகாமை இந்தியா தாக்கியது.. இதில், 350 பயங்கரவாதிகள் மற்றும் பயிற்சியாளர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது…

1971 போருக்குப் பிறகு, 2019-ம் ஆண்டில் தான் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விமானப் படையைப் பயன்படுத்தியது.. பாலகோட் நகரத்திலிருந்து சுமார் 20 கிமீ தொலைவில் உள்ள முகாமில், 500 முதல் 700 பேர் தங்கக்கூடிய இடத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பல பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்களுடன், ஜெய்ஷ் இ பயங்கரவாத அமைப்பின் முகாம் செயல்பட்டு வந்ததாக இந்தியாவுக்கு உளவுத் தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து, போர் விமானங்கள் மற்றும் பிற விமானங்கள் மேற்கு மற்றும் மத்திய கட்டளைகளில் உள்ள பல விமான தளங்களில் இருந்து ஒரே நேரத்தில் புறப்பட்டன.. இந்த முழு வான்வழி தாக்குதலும், 20 நிமிடங்களில் முடிந்து, அதிகாலை 3.45 மணிக்கு தொடங்கி 4.05 மணிக்கு முடிவடைந்தது. குறைந்தபட்சம் 325 பயங்கரவாதிகளும், 25 முதல் 27 பயிற்சியாளர்களும் முகாமில் இருந்தனர்.

மிராஜ் 2000 போர் விமானங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய விமானப்படை எந்த பயங்கரவாத முகாம்களையும் தாக்கவில்லை என்று மறுத்த பாகிஸ்தான், அதற்கு பதிலாக காலியான மலைப்பகுதியில் தாக்குதல் நடத்தியதாகக் கூறியது. இந்த தாக்குதலில் யாரும் உயிரிழப்போ அல்லது காயமோ ஏற்படவில்லை என்றும் அவர்கள் கூறினர். வான்வழி தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து எந்த அறிக்கையும் வெளியாகவில்லை..

Maha

Next Post

ஈரோடு இடைத்தேர்தல்…..!விதிமுறைகளை மீறினாரா முதலமைச்சர்…..?

Sun Feb 26 , 2023
நாளை பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மும்முறமாக செய்து வருகிறது. மேலும் அரசியல் கட்சிகள் இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தை கடந்த ஒரு மாத காலமாக செய்து வந்தார்கள். அந்த பிரச்சாரம் நேற்று மாலை 5 மணி உடன் ஓய்வு பெற்றது. ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக என்று இரு தரப்பும் பல அதிரடி பிரச்சாரங்களையும், சூறாவளி […]

You May Like