fbpx

கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு தடை..!! அதையும் மீறி விற்பனை செய்தால்..!! தமிழ்நாடு அரசு எச்சரிக்கை..!!

கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பான அறிக்கையில், “அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்வது மருந்து மற்றும் அழகு சாதனச்சட்டம் 1940 மற்றும் மருந்து விதிகள் 1945 இன் படி குற்றமாகும். தமிழக மருந்து கட்டுப்பாடு துறையின் மூலம் சில்லறை மற்றும் மொத்த மருந்து விற்பனை நிறுவனங்களில் தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் மேற்கண்ட விதிமீறல்களில் ஈடுபட்ட மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்கள் மீது கடந்த 6 மாதங்களில் 117 மருந்து விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை மற்றும் விநியோகம் செய்த 6 மருந்து விற்பனை உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், மேற்குறிப்பிட்ட மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை / விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

காய்ச்சல், சளிக்கு ஆண்டிபயாடிக் மாத்திரையா..? இனி வேண்டவே வேண்டாம்..!! ஆபத்தை தெரிஞ்சிக்கோங்க..!!

Wed Nov 22 , 2023
நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மற்றும் மாத்திரைகள் மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்களால் ஆய்வு செய்யப்படுகின்றன. இதன்மூலம் பல போலி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்படாத 70%-க்கும் அதிகமான ஆண்டிபயாடிக் FDC மருந்து வகைகள் சாதாரணமாக மருந்து கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இது காய்ச்சல், சளி ஆகியவற்றிற்காக வழங்கப்பட்டு வருவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், இந்த மருந்துகள் உத்தரகாண்ட், இமாச்சல் ஆகிய மாநிலங்களில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பொதுமக்கள் […]

You May Like