டெல்லியில் பெருகி வரும் வாகனங்களால், காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து பிஎஸ்-3, மற்றும் பிஎஸ்-4 வாகனங்களுக்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுதும், கடந்த 2017 முதல் பி.எஸ் 4 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பி.எஸ் என்பது, பாரத் ஸ்டேஜ் என்பதின் சுருக்கம் ஆகும். வாகனங்கள் வெளியிடும் புகையால், மாசு ஏற்படுவதை தடுக்க, இந்தியாவில் 2000ம் ஆண்டில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் காற்று மாசு அளவு 434 -ஐ கடந்துள்ளது. இந்த நிலையில் காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM) காற்று மாசு ஏற்படுவதை கட்டுப்படுத்த அறிவுறுத்திய நிலையில், நேற்றைய தினம் முதல், பிஎஸ்.3 பெட்ரோல் வாகனங்களுக்கும், பிஎஸ்.-4 டீசல் வாகனங்களுக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு தற்காலிகமானது தான் எனவும் வரும் வெள்ளிக்கிழமை வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.