fbpx

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாட தடை..? உத்தரவு போட்டாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்..?

அரசு அலுவலகங்களில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடக் கூடாது என்பது போன்ற அரசாணைகள் வெளியாகியிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை என்பது இந்து மத பண்டிகை என்பதை தாண்டி நாடெங்கும் மக்களின் வாழ்வியலோடு ஒன்றிவிட்ட பண்டிகை. ஆனால், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையின்போது கடவுள்களின் படங்களைப் பயன்படுத்தக் கூடாது என பல்வேறு துறைகள், நிறுவனங்கள், அரசு கல்வி நிலையங்கள் வாய்மொழி உத்தரவிட்டிருப்பதாகவும், சில அரசு துறைகள், நிறுவனங்கள் வெளிப்படையாகவே அறிவிப்பாணைகள் வெளியிட்டுள்ளதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

இது திமுக அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துச் சொல்லாத திமுக அரசு, இப்போது இந்து மத பண்டிகைகளை சீர்குலைக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது கண்டனத்திற்குரியது. திமுகவில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் இருக்கிறார்கள் என, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே கூறியிருக்கிறார். அதன்படி, தமிழ்நாடு அரசுப் பணிகளிலும் 90 சதவீதம் பேர் இந்துக்களாக இருப்பார்கள். அவர்களின் மத நம்பிக்கையை மறுப்பது, கொச்சைப்படுத்துவதுதான் திமுக அரசின் மதச்சார்பின்மையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு அலுவலகங்களில் இந்து மத கடவுள்களின் படங்கள் வைத்து சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடக் கூடாது என்றால், இந்து மத கோயில்களை மட்டும் அரசே நிர்வகிப்பது எப்படி சரியாகும்? இந்து கோயில்களை நிர்வகிக்கும் மாநில அரசு, இந்து மத பண்டிகைகளுக்கு எதிராக செயல்படுகிறது. கோயில் நிலத்தில் அரசு அலுவலகங்களை கட்டி விட்டு அங்கு, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையின் போது கடவுள் படங்களை வைத்து வணங்கக் கூடாது என்பது இந்துக்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கும் செயல்.

எனவே, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜைகளை மக்கள் அவரவர் விருப்பப்படி கொண்டாட அனுமதிக்க வேண்டும். முதலமைச்சர் இதில் தலையிட்டு மக்களின் வழிபாட்டு உரிமை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். உழைக்கும் மக்களின் கொண்டாட்டமான ஆயுத பூஜைக்கு, அனைவருக்கும் பொதுவான முதலமைச்சர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

இனி இவர்கள் அனைவருக்கும் இழப்பீடு உயர்த்தி வழங்க வேண்டும்...! மத்திய, மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

Sat Oct 21 , 2023
கழிவுநீர் அகற்றும் பணியின்போது உயிரிழந்தால் பணியாளர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, கழிவுநீர் அகற்றும் பணியின்போது நிரந்தர ஊனமுற்றோருக்கு குறைந்தபட்ச இழப்பீடாக ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்றும் தீர்ப்பளித்தது. மத்திய மற்றும் மாநில அரசுகள் கையால் கழிவுநீர் அகற்றும் பணியினை முற்றிலும் ஒழிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” […]

You May Like