fbpx

வங்கி மோசடி!… ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், நரேஷ் கோயலுக்கு சொந்தமான ரூ.538 கோடி சொத்துகள் முடக்கம்!… அமலாக்கத்துறை அதிரடி!

ஜெட் ஏர்வேஸ் பண மோசடி வழக்கில் அதன் உரிமையாளர் நரேஷ் கோயல் மற்றும் குடும்பத்தினரின் ரூ.538 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

கடந்த 2011 முதல் 2019ம் ஆண்டு வரை, கனரா வங்கியில் இருந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு கடன் தொகை வழங்கப்பட்டது. இந்த கடன் தொகையை நிறுவனத்திற்கு செலவிடாமல், தனிப்பட்ட செலவுகளுக்காக பயன்படுத்தியதாக வங்கி சார்பில் அமலாக்கத்துறையில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வந்தது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் நரேஷ் கோயல் மற்றும் குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் நரேஷ் கோயல் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை, நரேஷ் கோயலுக்கு எதிராக அமலாக்கத்துறை தனது குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதையடுத்து, நரேஷ் கோயல் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.598 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல், மகன் நிவான் கோயல் ஆகியோருக்கு சொந்தமான 17 குடியிருப்புகள்/ பங்களாக்கள் மற்றும் வணிக வளாகங்களை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதில் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் உள்ளிட்டவையும் அடங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

இனி வாட்ஸ் அப் போதும்!… கேஸ் சிலிண்டர் புக் பண்றது ரொம்ப ஈஸி!… எப்படி தெரியுமா?

Thu Nov 2 , 2023
சிலிண்டர் காலியாகும் பட்சத்தில் ஆன்லைன் மூலமாகவே எப்படி சிலிண்டரை புக் செய்வது என்பதற்கான முழு விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். இன்றைய நவீன காலத்தில் ஸ்மார்ட்போன் மற்றும் இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்த நிலையில் பலரும் ஆடம்பர தேவைகள் முதல் அடிப்படை சேவைகள் வரை தங்களின் மொபைல் மூலமாகவே செய்ய முடியும். இருப்பினும், உங்கள் மொபைல் போன் கால், SMS, ஆன்லைன்,மொபைல் ஆப், வாட்டஸ்அப் பல வழிகள் எளிமையான முறையில் […]

You May Like