வரும் ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிகாட்டுதலின் படி, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் குறிப்பிட்ட தேதிகளில் மூடப்படும். அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் 15 விடுமுறை நாட்கள் உள்ளன.. இந்த விடுமுறை நாட்கள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப வித்தியாசமாக இருக்கும். இருப்பினும், ஆன்லைன் வங்கி சேவை தொடர்ந்து செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த மாதம் உங்களுக்கு வங்கி தொடர்பான ஏதேனும் முக்கியமான வேலை இருந்தால், விடுமுறை நாட்களை மனதில் வைத்து உங்கள் வேலையைத் திட்டமிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள வங்கிகள் மாதத்தின் முதல் மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் இயங்கி வருகின்றன, அதே நேரத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகள் விடுமுறை நாட்களாகக் கருதப்படுகின்றன. அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறையாகக் கருதப்படுகிறது.
ஏப்ரல் மாதம் முதல் விடுமுறை ஏப்ரல் 1 ஆம் தேதி வங்கிக் கணக்குகள் முடிவடைவதன் மூலம் தொடங்கும். ஏப்ரல் 4 ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி அன்று விடுமுறை. மாதம் முழுவதும் வங்கியின் செயல்பாடு தொடர்பான எந்த பிரச்சனையும் இருக்காது. ஏடிஎம், பண டெபாசிட், ஆன்லைன் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் ஆகியவை இந்த காலகட்டத்தில் தொடர்ந்து செயல்படும்.
ஏப்ரல் 2023 வங்கி விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியல்
- ஏப்ரல் 1, 2023 (சனிக்கிழமை): வங்கிக் கணக்கின் வருடாந்திர மூடல்
- ஏப்ரல் 2, 2023 (ஞாயிறு): விடுமுறை
- ஏப்ரல் 4, 2023 (செவ்வாய்) – மகாவீர் ஜெயந்தி
- ஏப்ரல் 5, 2023 (புதன்கிழமை) – பாபு ஜக்ஜீவன் ராம் பிறந்தநாள்
- ஏப்ரல் 7, 2023 (வெள்ளிக்கிழமை) – புனித வெள்ளி
- ஏப்ரல் 8, 2023 (சனிக்கிழமை) – மாதத்தின் 2வது சனிக்கிழமை
- ஏப்ரல் 9, 2023 (ஞாயிறு) – விடுமுறை
- ஏப்ரல் 14, 2023 (வெள்ளிக்கிழமை) – டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி / போஹாக் பிஹு / சீராபா / பைசாகி / தமிழ் புத்தாண்டு தினம் / மஹா பிசுபா சங்கராந்தி / பிஜூ விழா / பிசு விழா
- ஏப்ரல் 15, 2023 (சனிக்கிழமை) – விஷு / போஹாக் பிஹு / ஹிமாச்சல் தினம் / பெங்காலி புத்தாண்டு தினம்
- ஏப்ரல் 16, 2023 (ஞாயிறு) – விடுமுறை
- ஏப்ரல் 18, 2023 (செவ்வாய்) – ஷப்-இ-கத்ர்
- ஏப்ரல் 21, 2023 (வெள்ளிக்கிழமை) – ரம்ஜான்
- ஏப்ரல் 22, 2023 (சனிக்கிழமை) – மாதத்தின் 4-வது சனிக்கிழமை
- ஏப்ரல் 23, 2023 (ஞாயிறு) – விடுமுறை
- ஏப்ரல் 30, 2023 (ஞாயிறு) – விடுமுறை.