fbpx

தமிழகம் முழுவதும்…! இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை…!

இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியூர்களில் உள்ள அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ம் தேதி வர உள்ளது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 16 மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 உழவர் திருநாள் என்று மூன்று நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சனிக்கிழமை என்பதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை.

இந்த நிலையில்,தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று இரண்டாம் சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாளை ஜனவரி 14, ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை. ஜனவரி 15, திங்கட்கிழமை பொங்கல், ஜனவரி 16 செவ்வாய்க்கிழமை மாட்டுப்பொங்கல், ஜனவரி 17 காணும் பொங்கல் அரசு விடுமுறை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று முதல் தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையில் இருக்கும். ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் மேற்கொள்வதில் எந்த ஒரு தடைகளும் இருக்காது.

Vignesh

Next Post

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிக்கிறீர்களா.? இந்த அதிர்ச்சி செய்தி உங்களுக்கு தான்..!

Sat Jan 13 , 2024
பொதுவாக தண்ணீர் தாகத்திற்காக நாம் கடைகளில் வாங்கும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் உடலுக்கு கேடு விளைவிப்பதோடு, சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும். தண்ணீர் மட்டுமல்லாது பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் ஜூஸ் போன்ற திரவங்களை குடிப்பதனால், வயிற்று வலி முதல் கேன்சர் வரை நோய்கள் தாக்கும் அபாயம் ஏற்படுகின்றது. சுத்தமான நீரை பருக வேண்டும் என்பது எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து வைத்திருக்கும் நீரை குடிப்பதை […]

You May Like