நவம்பர் மாதத்தில் 10 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு அதிக அளவில் விடுமுறை வழங்கப்பட்டது ஆனால் நவம்பரில் 10 நாட்களுக்கு மட்டுமே வங்கி விடுமுறைகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பண்டிகை நாட்கள் முடிந்துவிட்டதால், குருநானக் ஜெயந்தி, கார்த்திகை பூர்ணிமா, ரஹஸ் பூர்ணிமா போன்ற சில நிகழ்வு காரணமாக விடுமுறை இருக்கும். வழக்கம் போல வங்கி விடுமுறை நாட்களில் இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் ஞாயிறுகளும் அடங்கும்.
இரண்டாவது சனி, ஞாயிறு தவிர, நவம்பர் 1,8,11, மற்றும் 23 ஆகிய தேதிகளில் ரிசர்வ் வங்கி விடுமுறை அறிவித்துள்ளது. கன்னட ராஜ்யோத்சவ், குருநானக் ஜெயந்தி, கார்த்திகை பூர்ணிமா, ரஹஸ் பூர்ணிமா ஆகிய நாட்களில் பல நகரங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இந்த விடுமுறையில் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளும் அடங்கும். நவம்பர் மாதம் எந்தெந்த நாட்களில் வங்கிகள் இயங்காது என்பதை பற்றிய முழு பட்டியலை இங்கே பார்க்கலாம்.
நவம்பர் வங்கி விடுமுறை நாட்கள்: நவம்பர் 6 – ஞாயிறு, நவம்பர் 12 – இரண்டாம் சனி, நவம்பர் 13 – ஞாயிற, நவம்பர் 20 – ஞாயிறு, நவம்பர் 26 – நான்காம் சனி, நவம்பர் 27 – ஞாயிறு ஆகிய தேதிகளில் விடுமுறை.