ஜனவரி மாதத்தில் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2022 கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளதால் 2023 புத்தாண்டுக்கான உங்கள் காலெண்டரைத் திட்டமிடுவதற்கான நேரம் இது. புத்தாண்டு 2023 நெருங்கிவிட்டதால், புதிய வங்கி விடுமுறைப் பட்டியலின்படி உங்கள் விடுமுறைகளைத் திட்டமிடுங்கள். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் படி, ஜனவரி 2023 இல் வங்கிகள் 14 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். 14 நாள் விடுமுறையைத் தவிர, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை பட்டியல்…
ஜனவரி 1, 2023 அன்று புத்தாண்டு என்பதால் வங்கி விடுமுறை.
ஜனவரி 2, 2023 (திங்கட்கிழமை): புத்தாண்டு வங்கி கொண்டாட்டம் காரணமாக மிசோரம் மாநிலத்தில் விடுமுறை.
ஜனவரி 5, 2023 (வியாழன்): குரு கோவிந்த் சிங் ஜெயந்தி முன்னிட்டு ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் விடுமுறை.
ஜனவரி 8, 2023: ஞாயிற்றுக்கிழமை வங்கி விடுமுறை.
ஜனவரி 11, 2023 (புதன்கிழமை): மிஷனரி தினம் என்பதால் மிசோரம் மாநிலத்தில் விடுமுறை.
ஜனவரி 14, 2023: இரண்டாவது சனிக்கிழமை வங்கி விடுமுறை.
ஜனவரி 15, 2023: ஞாயிறு வங்கி விடுமுறை
ஜனவரி 22, 2023: ஞாயிற்றுக்கிழமை வங்கி விடுமுறை.
ஜனவரி 23, 2023 (திங்கட்கிழமை): நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி என்பதால் திரிபுரா மற்றும் மேற்கு வங்காளத்தில் விடுமுறை.
ஜனவரி 25, 2023 (புதன்கிழமை): மாநில நாள் இமாச்சலப் பிரதேசத்தில் விடுமுறை.
ஜனவரி 26, 2023 (வியாழன்): குடியரசு தினம் என்பதால் விடுமுறை.
ஜனவரி 28, 2023: நான்காவது சனிக்கிழமை வங்கி விடுமுறை.
ஜனவரி 29, 2023 (ஞாயிறு): வார இறுதி வங்கி விடுமுறை.
ஜனவரி 31, 2023: Me-Dam-Me-Phi முன்னிட்டு அஸ்ஸாம் மாநிலத்தில் விடுமுறை.