fbpx

தெலுங்கானா: 15 நிறுவனங்களில் நூதன வங்கி மோசடி.! பல கோடி ரூபாய் கொள்ளை அம்பலம்.!

தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தில் இருக்கும் ஆந்திரா வங்கியில், 15 நிறுவனங்களின் பெயரில் பல கோடி ரூபாயை ஒருவர் கடனாக பெற்றுள்ளார். இரண்டு வருடங்களாக அவர் பணத்தை செலுத்தி வந்த நிலையில், தனது கடனை புதுப்பிக்க முயன்ற போது, அவர் சமர்ப்பித்திருந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. வங்கி மோசடியில் ஈடுபட்ட 12 காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத் மாவட்டத்திலிருந்து சுமார் 63 கிலோ மீட்டர் தொலைவில் சங்கரெட்டி என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள ஆந்திரா வங்கியில், 2018ஆம் ஆண்டு, 15 நிறுவனங்களின் பெயரில் பல கோடி ரூபாயை ஒருவர் கடனாக பெற்றுள்ளார். இரண்டு வருடங்கள் அவர் பணத்தை செலுத்தி வந்த நிலையில், தற்போது அந்த கடனைப் புதுப்பிக்க முயன்றுள்ளார். கடனை புதுப்பிக்க வங்கி நிர்வாகம் அவரது ஆவணங்களை சரி பார்த்தபோது, பல முரண்பாடுகள் வெளிப்பட்டன.

2021ஆம் ஆண்டு வங்கியின் சார்பில், மோசடி செய்த அந்த நபர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இதற்கிடையில் அவர் பெற்ற கடனுக்கு பணத்தை சரிவர செலுத்தாததும் தெரியவந்தது. சட்ட அமலாக்க அதிகாரிகள் துரிதமாக விசாரணையை மேற்கொண்டு, மோசடி செய்தவர்களுக்கு எதிராக ஆதாரங்களை சேகரித்தனர்.

விடாமுயற்சியுடன் செயல்பட்ட ஆர்சி புரம் காவல் நிலைய அதிகாரிகள், குற்ற செயலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை சேகரித்து, தற்போது 12 பேரை கைது செய்துள்ளனர். பின்னர் கைது செய்தவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

English summary: 12 people were arrested in Telangana for involving in bank loan forgery by providing fake documents.

Read More: “நடிகர் Vijay-க்கு ஆலோசகராக இருக்க மாட்டேன்” – பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு.!

Next Post

DMK: அப்படியென்ன வன்மம்!… ஸ்டாலினை தாக்கி பேசிய ஆ.ராசா!… அதிர்ச்சியடைந்த திமுகவினர்!

Thu Feb 22 , 2024
DMK: இந்த மாதிரி பொய் சொல்ற முதல்வரை பார்த்ததில்லை” என்ற ஆ.ராசாவின் பேச்சு திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மேட்டுப்பாளையம் அருகே நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தி.மு.க., எம்.பி ஆ.ராசா பேசும் போது, இந்த மாதிரி பொய் சொல்லும் முதல்வரை பார்த்ததில்லை என கூறியது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், பின்னர் பொய் சொல்லும் பிரதமரை பார்த்ததில்லை” என மாற்றிக் கூறி சமாளித்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் அதிகம் […]

You May Like