fbpx

மக்களே…! ஜனவரி 30,31 நாடு முழுவதும் வங்கிகள் இயங்காது என அறிவிப்பு…! இது தான் காரணம்…!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 30 முதல் இரண்டு நாள் வங்கி வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.

வங்கித் துறையில் தொழிற்சங்கங்களின் குடை அமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் வங்கி யூனியன்ஸ் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 30 முதல் இரண்டு நாள் வங்கி வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. மும்பையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது கோரிக்கைகள் குறித்து இந்திய வங்கிகள் சங்கத்திடம் இருந்து எந்த பதிலும் வராததால் அமைப்பு வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அறிக்கையை வெளியிட்டது.

அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வெங்கடாசலம் கூறியதாவது, மும்பையில் நேற்று அமைப்பின் கூட்டம் நடைபெற்றது, இந்திய வங்கிகள் சங்கத்தின் கோரிக்கைகளை கடிதங்களாக அனுப்பியும் எந்த பதிலும் வராததால், ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

கவனம்...! வந்தது அதிரடி தடை...! மீறி செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை...! ஆட்சியர் அறிவிப்பு..‌!

Sat Jan 14 , 2023
போகி முன்னிட்டு டயர் உள்ளிட்ட பொருட்களை எரித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழர்‌ திருநாளான பொங்கலுக்கு முதல்‌ நாள்‌ போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில்‌ சில பழைய பொருட்களை எரிப்பது வழக்கம்‌. இந்நாளில்‌ கிழிந்த பாய்கள்‌, பழைய துணிகள்‌, தேவையற்ற விவசாய கழிவுகள்‌ ஆகியவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள்‌. பெரும்பாலும்‌ நமது கிராமங்களில்‌ கடைபிடிக்கப்படும்‌ இப்பழக்கம்‌ சுற்றுச்சூழலுக்கு பெருந்தீமையை ஏற்படுத்தாத ஒன்றாகும்‌. […]

You May Like