ஆகஸ்ட் மாதத்தில் வரும் வங்கி விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது..
ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிகாட்டுதலின் படி, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் குறிப்பிட்ட தேதிகளில் மூடப்படும். இந்த விடுமுறை நாட்கள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப வித்தியாசமாக இருக்கும். இருப்பினும், ஆன்லைன் வங்கி சேவை தொடர்ந்து செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த மாதம் உங்களுக்கு வங்கி தொடர்பான ஏதேனும் முக்கியமான வேலை இருந்தால், விடுமுறை நாட்களை மனதில் வைத்து உங்கள் வேலையைத் திட்டமிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விடுமுறைப் பட்டியலின்படி, ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் ஞாயிறு போன்ற வழக்கமான விடுமுறைகள் உட்பட 9 வங்கி விடுமுறை நாட்கள் உள்ளன.. இருப்பினும், ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் வங்கிகள் திறந்திருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்
ஆகஸ்ட் மாதத்தில் வரும் வங்கி விடுமுறை நாட்கள் :
- ஆகஸ்ட் 7: ஞாயிறு
- ஆகஸ்ட் 9 (செவ்வாய்): மொஹரம்
- ஆகஸ்ட் 13: இரண்டாவது சனிக்கிழமை
- ஆகஸ்ட் 14: ஞாயிறு
- ஆகஸ்ட் 15 (திங்கட்கிழமை): சுதந்திர தினம்
- ஆகஸ்ட் 19 (வெள்ளிக்கிழமை): ஜென்மாஷ்டமி
- ஆகஸ்ட் 21: ஞாயிறு
- ஆகஸ்ட் 27: நான்காவது சனிக்கிழமை
- ஆகஸ்ட் 28: ஞாயிறு
ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட வங்கி விடுமுறை நாட்களில் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகளின் கிளைகள் மூடப்பட்டிருக்கும்.