fbpx

உஷார்..!! தமிழ்நாட்டில் 7,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு..!! அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு இல்லை என்ற நிலை மாறி தற்போது நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்படுவதாகவும், ஜனவரியில் இருந்து தற்போது வரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஒவ்வொரு வாரமும் 1000 முகாம்கள் என ஆரம்பித்து, தற்போது அவசியத்திற்கு ஏற்ப 2 ஆயிரம் முகாம்கள் வரை நடத்தப்படுகிறது. கடந்த 4 வாரங்களில் மட்டும் 8,380 முகாம்கள் நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்திய வரலாற்றிலேயே வடகிழக்கு பருவமழைக்காக 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மருத்துவ முகாம் நடத்தி தமிழ்நாடு அரசு சாதனை புரியவுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சென்னையில் உள்ள மொத்த மழைநீர் வடிகால்களில் 40% அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழையை கண்டால் சென்னை மக்கள் அஞ்சும் நிலை மாறி, இன்று மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் மழை நீர் வடிகால். கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் இன்று வரை டெங்கு காய்ச்சலால் 7,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்படுகிறது. தற்போது வரும் இருமல் 20 முதல் 25 நாட்கள் வரை நீடிக்கிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கால்வலி, தலைவலி நிறைய இருந்தது. ஒவ்வொரு துறை மருத்துவர்களும் ஆய்வு செய்து வருகின்றனர். இப்போது பிசியோவும் ஆய்வு செய்யவுள்ளனர். சென்னையில் இருக்கும் ஒட்டுமொத்த நாய்களும் கணக்கெடுக்கப்படவுள்ளது. நாய்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி போடப்படும். பொதுமக்களும் வெறிபிடித்த நாய்களை கண்டால் மாநகராட்சிக்கு தெரியப்படுத்தவும்.

ஒரு வெறிபிடித்த நாய் 27 நபர்களை கடிக்கும் வரை அந்த பகுதி மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது ஆச்சரியமாக இருக்கிறது. ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய் கடித்தவர்கள் பயப்பட தேவை இல்லை. முறையான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

Chella

Next Post

"நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…" மகள் கண்முன்னே தந்தைக்கு நேர்ந்த கொடூரம்.!

Sat Nov 25 , 2023
மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனமிடையே நீண்ட நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் இந்த போர் மிகவும் தீவிரமடைந்தது. பாலஸ்தீன போராளி குழுவான ஹமாஸ் இஸ்ரேலிய ராணுவத்திற்கு எதிராக பலமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் யுத்தத்தில் பல நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர். சமீபத்தில் இஸ்ரேலைச் சேர்ந்த பிணை கைதிகளை ஹமாஸ் இயக்கம் விடுவித்தது. இதனைத் […]

You May Like