fbpx

உஷார்!. இந்தியாவை நெருங்கிய Mpox தொற்று!. பாகிஸ்தானில் 3 பேருக்கு பாசிட்டிவ்!. எப்படி பரவுகிறது?

Mpox: அண்டை நாடான பாகிஸ்தானின் வடக்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மூன்று பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆப்ரிக்காவில் வேகமாக பரவி வரும், ‘மங்கி பாக்ஸ்’ தொற்று பரவலை, உலகளவில் கவலை அளிக்கக்கூடிய பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதை சாதாரணமாக கையாண்டால், உலகம் முழுதும் பரவி மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

எம்பாக்ஸ்’ என்று அழைக்கப்படும், ‘மங்கி பாக்ஸ்’ தொற்று, 1958ல் முதன்முதலில் குரங்குகளிடம் கண்டறியப்பட்டது. அதன்பின், 1970ல் மனிதர்களிடையே இந்த தொற்று பரவல் கண்டறியப்பட்டது. வனப்பகுதிகளில் வாழும் பாலுாட்டிகளிடம் இருந்து இந்த வகை தொற்று பரவுவதாக கூறப்படுகிறது. ஆப்ரிக்க நாடுகளில் இந்த தொற்றுப் பரவல் அதிகம் தென்பட்டதால், மற்ற நாடுகள் இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. எனவே, இந்த தொற்றுக்கான தடுப்பூசி மற்றும் சிகிச்சை குறித்த ஆய்வுகள் மந்தமாகவே இருந்தன.

கடந்த 2022ல் வளர்ந்த நாடுகளிலும் மங்கி பாக்ஸ் பரவத் துவங்கியதை அடுத்து ஆய்வுப் பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டன. உலகம் முழுதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆப்ரிக்க நாடுகளில் கடந்த ஆண்டு ஜனவரி முதல், மங்கி பாக்ஸ் பரவல் மிக மோசமாக உள்ளன. இதுவரை 27,000 தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. 1,100 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதை தொடர்ந்து, மங்கி பாக்ஸ் தொற்றை, சர்வதேச அளவில் கவலை அளிக்கக்கூடிய தொற்றாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக சர்வதேச அளவிலான சுகாதார அவசர நிலையையும் அறிவித்துள்ளது. இதை சாதாரணமாக எடுத்துக் கொண்டால், உலகம் முழுதும் பரவி மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக எச்சரித்துள்ளது. மங்கி பாக்ஸ் தொற்றில் இரண்டு வகையான திரிபுகள், மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் இருந்து தற்போது பரவி வருகின்றன.

அந்தவகையில், பாகிஸ்தானின் வடக்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மூன்று பேருக்கு மங்கி பாக்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுவிட்டு சமீபத்தில் பாக்., திரும்பியவர்கள். மூவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு ஏற்படும் நாளில் இருந்து, 1 முதல் 21 நாட்களுக்குள்ளாக அறிகுறிகள் தென்பட துவங்கும். இந்த அறிகுறிகள், பொதுவாக 2 – 4 வாரங்கள் வரை தொடரும். நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கு நான்கு வாரங்களையும் கடந்து அறிகுறிகள் தென்படும்.

எப்படி பரவுகிறது? மனிதர்கள் நெருக்கமாக பழகும் போதும், தோலுடன் தோல் உரசும் போதும், வாய்வழி அல்லது உடலுறவின் வாயிலாகவும் தொற்று எளிதில் பரவுகிறது. துணிகள் வாயிலாகவும், ‘டாட்டூ’ குத்தும் போது அந்த ஊசி வாயிலாகவும் தொற்று எளிதாக பரவுகிறது.தொற்று பாதிப்புள்ள விலங்குகளை வேட்டையாடுதல், சமைத்தல் மற்றும் அதன் எச்சம் உடலில் படுவதன் வாயிலாக, மிருகங்களிடம் இருந்து மனிதர்களுக்கு மங்கி பாக்ஸ் பரவுகிறது.

Readmore: முக்கிய துறை செயலாளர்கள் திடீர் மாற்றம்!. மத்திய அரசு அதிரடி!

English Summary

Be careful! Mpox infection close to India! Positive for 3 people in Pakistan! How is it spread?

Kokila

Next Post

இறுதி வாய்ப்பு...! நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.7,500... விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்...!

Sat Aug 17 , 2024
Rs 7,500 per month under the Nan Muthalvan scheme

You May Like