fbpx

குன்னூர் அருகே நாவல் பழங்களைத் தேடி ஊருக்குள் நுழையும் கரடிகள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி பகுதி கிராமங்களில் உள்ள தேயிலை தோட்டங்களில் நாவல் பழ மரங்கள் உள்ளன. கரடிகளுக்கு மிகவும் பிடித்த நாவல்பழம் தற்போது இங்கு காய்க்க துவங்கியுள்ளது. இதன் காரணமாக கரடிகள் நாவல் பழங்களை தேடி தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு அருகே உலவுகின்றன.

குறிப்பாக கிராமத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பெரிய கரடிகள் ஒரே நேரத்தில் நுழைந்து அங்குள்ள நாவல் பழ மரங்களிலிருந்து கீழே விழுந்துள்ள பழங்களை சாப்பிட்டுச் சென்றன. ரயில் பாதையில் கரடியொன்று குடியிருப்பிற்கு மிகவும் அருகில் சுற்றி வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். அசம்பாவிதங்கள் நடக்கும் முன் கரடிகளை பிடிக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Maha

Next Post

இந்திய வீரர்கள் யாரிடமும் ஈகோ இல்லை - கபில் தேவிற்கு பதில் கொடுத்த ஜடேஜா

Tue Aug 1 , 2023
முன்னாள் கிரிக்கெட் வீரரான கபில்தேவ் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்திருந்தார். “ ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாடுவதன் மூலம் இந்திய வீரர்கள் அதிக பணத்தை சம்பாதிக்கிறார்கள். பணம் வரும்பொழுது ஈகோவும், திமிரும் சேர்ந்து வருகிறது.  தங்களுக்கு எல்லாமே தெரியும் என்று  இந்திய அணியின் வீரர்கள்  நினைக்கிறார்கள். ஐபிஎல் தொடருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை, இந்திய அணிக்காக அளிக்க வேண்டும். சுனில் கவாஸ்கர் மாதிரியான ஜாம்பவான்களிடம்  யாரும் ஆலோசனை கேட்பதில்லை” என்று […]

You May Like