fbpx

2க்கு 1 இலவசம் ஆஃபர் போட்ட டாஸ்மாக்….! பீர் பாட்டிலை வாங்கி சென்ற மது பிரியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!

புதுவை எல்லை பகுதியான கிருகம்பாக்கம் அடுத்துள்ள கடலூர் புதுச்சேரி ரோட்டில் முள்ளோடை நுழைவாயில் பகுதியில், ஸ்ருதி என்ற தனியார் பார் மற்றும் ரெஸ்டாரன்ட் இயங்கி வருகிறது.

இந்த ரெஸ்டாரண்டுக்கு கிருகம்பாக்கத்தை சேர்ந்த 2 கூலி தொழிலாளிகள் மது குடிப்பதற்காக வந்து உள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் உள்ள ஒரு பலகையில் இரண்டு பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் என்று எழுதியிருந்தது. இதற்கு ஆசைப்பட்ட அந்த கூலி தொழிலாளிகள் 3 பீரையும் வாங்கிக் கொண்டு நான்வருடன் குடித்ததாக சொல்லப்படுகிறது. பீர் பாட்டிலை பார்த்தபோது அந்த பீர் பாட்டிலுக்குள் தினசரி காலண்டர் காகிதங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்த பீர் தரமானதா அல்லது போலியான பீரா என்ற பயத்தில் கடையில் பாரில் இருந்த ஊழியரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பியிருக்கிறார் இதற்கு கேஷியர் 2 பீர் வாங்கினால் 1️ இலவசம் என போடப்பட்டுள்ளது அது இதுதான் என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு அந்த கூலி தொழிலாளி இதை மாற்றி கொடுக்குமாறு கேட்டு இருக்கிறார், தர முடியாது என்று மறுத்ததால், எனக்கு இந்த பாட்டிலுக்கான பில்லை கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

அதற்கு கேஷியர் 3 டிருக்கும் பில் வழங்கியுள்ளார். இதை வாங்கிக்கொண்டு பிறகு இந்த பெயரில் காகிதம் இருப்பது தொடர்பாக கேட்டதற்கு பணியிலிருந்து ஊழியர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை வழங்கியதாக கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த மதுப்பிரியர் இது தொடர்பாக காவல்துறையிடம் தெரிவித்துவிட்டு சென்றுவிட்டார். மேலும் இந்த கடைக்கு வந்தவர்கள் பலரும் இதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

Next Post

நீங்க போதை பொருளை ஒழிக்கிற லட்சணம் இதுதானா…..? பாதிக்கப்படும் பள்ளி கல்லூரி மாணவர்கள் சிவகாசி அருகே அதிகரிக்கும் போதை பொருள் விற்பனை……!

Sat Jun 24 , 2023
சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் இருக்கின்றன. இங்கே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைக்கும் விதமாக கஞ்சா போதை மாத்திரை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள் மிக எளிதாக போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். சிவகாசி புறநகர் பகுதியில் மாணவர்கள் […]

You May Like