fbpx

ரூ.50,000 ஊதியத்தில் BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…! B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்…!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Project Engineer- I, Trainee Engineer – Iபணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என 50 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E, B.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது..

விண்ணப்பதாரர்களுக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு முன் அனுபவம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் அதிகபட்சம் ரூ.50,000 ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 25-ம் தேதி தான் கடைசி நாள். எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=DETAIL%20ADVERTISEMENT-09-02-23.pdf

Vignesh

Next Post

கடலில் வீசப்பட்ட 7.5 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள்…..! ஸ்கூபா வீரர்கள் உதவியுடன் மீட்ட கடற்படை….!

Fri Feb 10 , 2023
இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் சிங்கம் 2, இந்த திரைப்படத்தில் தூத்துக்குடி கடல் வழியாக போதை பொருள் கடத்தும் கும்பலை கண்டுபிடித்து அவர்களை கைது செய்து தண்டனை வாங்கித் தருவார் போலீஸ் அதிகாரியான சூர்யா. இது போன்ற சம்பவங்கள் எல்லாம் திரைப்படத்தில் தான் நடக்கும் என்று நாம் பார்த்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இது போன்ற ஒரு நம்ப முடியாத சம்பவம் நிஜ வாழ்விலும் தற்போது நடந்திருக்கிறது. இலங்கையில் […]
சிறந்த முதலீடு..!! தங்க பத்திர விற்பனை இன்று முதல் தொடக்கம்..!! எவ்வளவு விலை, எப்படி வாங்கலாம்..?

You May Like