fbpx

BEL நிறுவனத்தில் ரூ.40,000 ஊதியத்தில் வேலை…! நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்…!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னையில் உள்ள அலுவலகங்களில் Project Engineers – I பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E.., B.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

விண்ணப்பதாரர்களுக்கு பிரிவிற்கு ஏற்றாற்போல் வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. பணிக்கு முன் அனுபவம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் அதிகபட்சம் ரூ.40,000 ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=1%20Pune%20Project%20Engr%20Advt%20Date%20extended%2014092022.pdf

Vignesh

Next Post

வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகள் மூலம் மேற்கொள்ளும் இண்டர்நெட் கால்களுக்கு இனி கட்டணமா..?

Tue Sep 13 , 2022
தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மற்றும் இணைய சேவை வழங்குநர்களுக்கு பொருந்தும் வகையில், இணைய அழைப்பு மற்றும் செய்தியிடல் பயன்பாடுகள் அதே அளவிலான உரிமக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றும், சேவை தரம் போன்ற கட்டுப்பாடுகளுக்கு இணங்க வேண்டும் என்றும் தொலைதொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.. 2008 ஆம் ஆண்டில், இணைய சேவை வழங்குநர்கள், சாதாரண தொலைபேசி நெட்வொர்க்குகளில் அழைப்புகள் உட்பட இணைய தொலைபேசியை வழங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று […]

You May Like