fbpx

பட்டர் காஃபி பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா.? என்னென்ன நன்மைகளை தரும் தெரியுமா.?!

பலரும் காலை எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிப்பதை பழக்கமாக வைத்திருக்கிறோம். ஆனால் வெறும் வயிற்றில் இவ்வாறு டீ, காபி குடிப்பது உடலுக்கு கேடு விளைவிக்கும். இதனை குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதாக கருதி வருகிறோம்.

இவ்வாறு உடலுக்கு கேடு விளைவிக்கும் டீ மற்றும் காபி குடிப்பதற்கு பதிலாக பட்டர் காபி குடிக்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த பட்டர் காபியை எப்படி செய்யலாம் மற்றும் இதன் நன்மைகள் என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்?

பட்டர் காபி செய்முறை

தண்ணீர் – 2 கப்
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
காபி தூள் – 1 டீஸ்பூன்
லவங்கப்பட்டை தூள் – சிறிதளவு

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் காபி பொடியை சேர்த்து கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின்பு டம்ளரில் கொதிக்க வைத்த காபி, தேங்காய் எண்ணெய், லவங்க பட்டை தூள், பட்டர் சேர்த்து பிளண்டர் வைத்து நன்றாக நுரை ததும்பும் வரை கலக்க வேண்டும். (பிளென்டருக்கு பதிலாக மிக்ஸியும் உபயோகப்படுத்தலாம்) இவ்வாறு செய்தால் சுவையான பட்டர் காஃபி ரெடி.

பட்டர் காபியின் நன்மைகள்

கீட்டோ டயட், பேலியோ டயட் போன்ற டயட் முறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது பட்டர் காபி. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் பட்டர் காபி அருந்தலாம். பட்டர் காபியில் ஒமேகா 3 சத்து அதிகமாக உள்ளதால் உடலில் புரதச்சத்தை அதிகப்படுத்தி கொழுப்பை கரைக்கிறது. உடல் எடையை குறைப்பதோடு, வயிறு சம்பந்தமான பிரச்சினைகளையும் சரி செய்கிறது.

Baskar

Next Post

துப்புரவு அலுவலர் உயிரிழப்பு...! ரூ.10 லட்சம் நிதியுதவி + மகனுக்கு அரசு வேலை...!

Fri Jan 12 , 2024
சென்னை மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணப் பணி மேற்கொள்ள தமிழ்நாட்டில் உள்ள பிற நகராட்சி மற்றும் மாநகராட்சி சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். அப்பணிக்காக பணியாளர்கள் இராஜபாளையம் நகராட்சியின் துப்புரவு அலுவலர் ஜெயப்பால் மூர்த்தி என்பவர் சென்னைக்கு 05.12.2023 அன்று வரும் போது விக்கிரவாண்டி அருகில் ஏற்பட்ட விபத்தில் காலமனார். காலமான பணியாளரின் மனைவிக்கு ரூ.10,00,000/- (ரூபாய் பத்து இலட்சம்) நிதியுதவி வழங்கவும் மற்றும் அவரது வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை […]

You May Like