fbpx

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் கருப்பு எள்.! எப்படி பயன்படுத்தலாம்.!?

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் நீரிழிவு நோய் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதித்து வருகிறது. அன்றாட உணவு பழக்க வழக்கங்களும், தவறான வாழ்க்கை முறையுமே இதற்கு காரணமாக இருந்து வருகிறது. உடலில் இன்சுலின் சுரப்பு குறைபாடு ஏற்படுவதால் நீரழிவு நோய் வருகிறது. இதனை ஆரம்ப காலகட்டத்தில் கண்டறிந்தால் உணவு பழக்கங்களின் மூலம் கட்டுப்படுத்தலாம்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள்உடற்பயிற்சி, நடை பயிற்சி கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். நோயின் தீவிரம் அதிகமாக உள்ளவர்கள் மருத்துவரை சந்தித்து மருந்துகள் எடுத்து வர வேண்டும். மேலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதில் கருப்பு எள் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதை எப்படி எப்படி பயன்படுத்தலாம் என்பதை குறித்து பார்க்கலாம்.

1. சர்க்கரை நோயாளிகளுக்கு செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் பிரச்சனை போன்றவை அதிகமாக ஏற்படும். இதற்கு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக கருப்பு எள்ளை வாயில் போட்டு மென்று வந்தால் செரிமான பிரச்சனை குறையும்.
2. நீரிழிவு நோயாளிகளுக்கு செரிமான மண்டலம் வேகமாக செயல்படாது. இதனால் உடல் எடை விரைவில் அதிகரிக்கும். இத்தகையவர்கள் கருப்பு எள்ளை சாப்பிட்டு வரலாம்.
3. கருப்பு எள்ளில் பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து போன்ற பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை சாப்பிட்டு வந்தால் உணவுகளின் மூலம் ரத்தத்தில் கலக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
4. கருப்பு எள்ளில் கால்சியம் சத்து நிறைந்ததாக உள்ளதால் இதனை சாப்பிடுவதன் மூலம் பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலிமை சேர்கிறது.
கருப்பு எள்ளை தயிருடன் கலந்து சாப்பிடலாம் அல்லது கருப்பு எள்ளை சட்னியாகவும் செய்து சாப்பிடலாம். பெரும்பாலும் கருப்பு எள்ளை பச்சையாக அப்படியே உட்கொள்வது தான் ஊட்டச்சத்து அதிகரிக்கும். குறிப்பாக நீரிழிவு நோய் அதிகம் உள்ளவர்கள் கருப்பு எள்ளை உட்கொள்வதற்கு முன்பு மருத்துவரை கண்டிப்பாக அணுக வேண்டும்.

Rupa

Next Post

வாவ்...! 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளம் விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை...! எப்படி விண்ணப்பிப்பது...?

Sat Feb 10 , 2024
இளம் விளையாட்டு வீரர்களுக்கு இந்திய உணவுக் கழகம் சார்பில் வழங்கப்படும் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம். உதவித் தொகை பெற தகுதி வாய்ந்த இளம் விளையாட்டு வீரர்களிடமிருந்து இந்திய உணவுக் கழகம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. 2024-25 -ஆம் ஆண்டிற்கு 15-18 மற்றும் 18-24 வயதுக்குட்பட்ட கீழ்க்கண்ட விளையாட்டுக்களில் உதவித்தொகை பெறுவதற்கு தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர்களிடமிருந்து இந்திய உணவுக் கழகம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. எந்தெந்த விளையாட்டு…? விண்ணப்பதாரர்கள் வில்வித்தை, தடகளம், பூப்பந்தாட்டம், […]

You May Like