பொதுவாக நம் தமிழ்நாட்டின்சமையல் முறைகளில் கருவேப்பிலையை சேர்த்து பயன்படுத்துவது பலரது குடும்பங்களிலும் சாதாரணமான வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த கருவேப்பிலையை பலரும் எளிதாக குப்பையில் தூக்கி வீசி விடுகிறார்கள். மேலும் கருவேப்பிலையில் பல்வேறு விதமான நோய்களை தீர்க்கும் மருத்துவ குணம் நிறைந்துள்ளன.
குறிப்பாக கருவேப்பிலை இதயத்தை பாதுகாத்து, இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனை உண்பதன் மூலம் மாரடைப்பு போன்ற இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தரக்கூடிய கருவேப்பிலையில் ஆன்ட்டி பாக்டீரியல் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளது. இதனை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வதால் பாக்டீரியா மற்றும் வைரஸ்களினால் ஏற்படும் பிரச்சனைகளை உடனடியாக சரி செய்யும்.
மேலும் செரிமான மண்டலத்தை சீராக்கி வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கவும், மலச்சிக்கல் வராமல் இருக்கவும் செய்வதில் முக்கிய பங்கு கருவேப்பிலை வகிக்கிறது. தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளான முடி உதிர்தல், பொடுகு, தலையில் அரிப்பு, வறட்சி போன்ற பிரச்சினைகளையும் சரி செய்கிறது.
இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய கருவேப்பிலையை தினமும் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். கருவேப்பிலையை குழந்தைகள் சாப்பிடுவதற்கு மிகவும் கஷ்டப்படுவார்கள் இந்த மாதிரி நிலையில் கருவேப்பிலையை பொடி செய்து கருவேப்பிலை சாதமாக செய்து தரலாம். இது குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பல நன்மைகளை தரும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.