fbpx

பெற்றோர்களே, உங்க குழந்தைங்க உங்க கூட தூங்குறாங்களா? அப்போ உடனே இந்த பழக்கத்தை நிறுத்துங்க.. நிபுணர்கள் அட்வைஸ்..

நமது பழக்க வழக்கத்தின் படி, நாம் பெற்ற பிள்ளைகளுக்கு திருமணம் ஆகும் நாள் வரை நம்மோடு தூங்க வைப்பது தான். குழந்தைகளை தனியாக தூங்க வைக்கும் கலாச்சாரம், பெரும்பாலும் நம்மிடத்தில் இல்லை. ஆனால், இந்த பழக்கம் அவர்கள் சிறு பிள்ளையாக இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அவர்கள் வளர்ந்த பிறகும் நம்முடனே அவர்களை தூங்க வைப்பது ஒரு சில அசௌகரியங்களை ஏற்படுத்தும். குறிப்பாக, காலத்தின் கட்டாயத்தால் நீங்கள் வேரெங்காவது செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதில் பெரிதும் பாதிக்கப்படுவது நம் பிள்ளைகள் ஆகத்தான் இருப்பார்கள்.

பொதுவாகவே, குழந்தைகள் வளரும் போது, ​​அவர்கள் தனியாகத் தூங்க விரும்புகிறார்கள். சில நேரங்களில் குழந்தையே தனியாகத் தூங்க விரும்பினால் கூட பெற்றோர்கள் விடுவதில்லை. ஆனால் இது முற்றிலும் தவறான ஒன்று. இதனால், அவர்களுக்கு தூக்கம் வந்தாலே பெற்றோரைத் தேடுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. இதற்காக, உங்கள் பிள்ளையைத் தனியாகத் தூங்கு என்று கூறி வற்புறுத்த வேண்டாம். இதனால், முதலில் அவர்களை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தனியாகத் தூங்க வைத்து பழக்குங்கள். பின்னர் நாட்களைப் படிப்படியாக அதிகரிக்கவும்.

தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன், அவர்களை நன்கு சுத்தம் செய்து, நைட் டிரெஸ் போட்டு விட்டு அவர்களை படுக்கவையுங்கள். பின்னர் அருகில் அமர்ந்து நல்ல கதை ஒன்றைச் சொல்லுங்கள். அவர்கள் சற்று தூங்கியதும், விளக்குகளை அணைத்து விடுங்கள். முதலில் குழந்தைகளுக்கு சிரமமாக இருந்தாலும் நாளடைவில் பழகிக்கொள்வார்கள். இப்படிச் செய்தால் தான் உங்கள் குழந்தைகள் விரைவாகத் தனியாக உறங்குவதற்குப் பழகுவார்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, 8 வயதிலிருந்தே குழந்தைகளை தனியாகத் தூங்க வைக்க பழக்க வேண்டும்.

நீங்கள் இப்படி உங்கள் குழந்தைகளை தனியாக தூங்க வைத்து பழக்கினால், அவர்களுக்கு எதனையும் சமாளிக்கும் திறனும் வளரத் துவங்குகிறது. அவர்களின் பொறுப்புணர்வு அதிகரிக்கிறது. சிறுவயதிலிருந்தே அவர்கள் சுதந்திரமாக வாழ கற்றுக்கொள்வார்கள். மேலும், அவர்களின் வாழ்க்கையின் தரம் மேம்படுகின்றது. அது மட்டும் இல்லாமல், இந்தப் பழக்கம் அவர்களுக்கு மன வளர்ச்சியையும், மன முதிர்ச்சியையும் கொடுக்கும். இன்னும் தெளிவாக சொல்லப்போனால், நிரந்தரம் இல்லாத இந்த வாழ்கையில், நாம் இல்லை என்றாலும் அவர்கள் தைரியமாக வாழ பழகிக்கொள்வார்கள்.

Read more: அடிக்கடி நரம்பு சுண்டி இழுக்குதா? இனி கவலையே வேண்டாம்.. அடிக்கடி இந்த பானத்தை குடிச்சா போதும்..

English Summary

benefits of making kids sleeping alone

Next Post

அடி தூள்..! இனி மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 கிடையாது...? விரைவில் வரப்போகும் புதிய அறிவிப்பு...! என்ன தெரியுமா...?

Tue Jan 21 , 2025
Magalir urimai thogai is no longer Rs. 1,000.
மகளிர் உரிமைத்தொகை திட்டம்..!! உங்களுக்கு ஏதேனும் சந்தேகமா..? விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணை வெளியீடு..!!

You May Like