fbpx

பப்பாளி தண்ணீர் பற்றி கேள்வி பட்டு உள்ளீர்களா.? என்னென்ன நோய்களை தீர்க்கும் தெரியுமா.!?

பொதுவாக பழ வகைகளில் பப்பாளி பழம் அதிக ஊட்டச்சத்து நிறைந்த பழமாக உள்ளது. உடலில் ரத்த சிவப்பணுக்கள் உயரவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது பப்பாளி. அப்படியிருக்க பப்பாளிப்பழ விதைகளை ஊற வைத்து அந்த தண்ணீரை குடித்து வந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது குறித்து பார்க்கலாம்?

இரவு நேரத்திலேயே பப்பாளி விதைகளை தண்ணீரில் ஊற வைத்துவிட்டு அதனை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடித்து வரவேண்டும். இவ்வாறு குடிப்பது உடலை சுத்தப்படுத்தி நோய்க்கிருமிகள் தாக்காமல் பாதுகாக்கிறது. காலையில் எழுந்தவுடன் டீ மற்றும் காபி போன்றவற்றை குடிப்பதை விட பப்பாளி விதை ஊற வைத்த நீர் குடிப்பது தான் உடலுக்கு சிறந்தது.

பப்பாளி விதைகளை ஊற வைத்து வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை நீக்கி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. பப்பாளி விதைகளை ஊற வைத்த நீரில் பஃபேன் என்ற வேதிப்பொருள் உள்ளதால் இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிகிறது.

மேலும் அடிக்கடி நோய் பாதிக்கப்படுபவர்கள், கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள், வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள், பப்பாளி விதையை ஊற வைத்த நீரை தினமும் காலையில் கண்டிப்பாக குடித்து வர நோய்கள் உடனடியாக நீங்கும் என்று வல்லுனர்களும் அறிவுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rupa

Next Post

மார்ச் 15-ம் தேதி வரை டைம்....! மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவம் வெளியேற வேண்டும்...!

Mon Jan 15 , 2024
மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், இந்தியாவுக்கு எதிராகவும்மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் கருத்து தெரிவித்ததை அடுத்து, அந்நாட்டுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என்ற பிரச்சாரம் இந்தியாவில் தீவிரமடைந்தது. இதை அடுத்து ஒரே சீனா கொள்கையை மாலத்தீவு உறுதியாக ஆதரிக்கிறது என மாலத்தீவு பிரதமர் கூறினார். தைவான் சீனாவின் பிரிக்க முடியாத பகுதி. சீனாவின் இறையாண்மையை […]

You May Like