fbpx

இது தெரிந்தால் இனி மாதுளம்பழ தோலை தூக்கி வீச மாட்டீர்கள்.! பயனுள்ள டிப்ஸ்.!

மாதுளம் பழத்தில் உள்ள நன்மைகளை அறியாதவர் யாரும் இலர், ஆனால் நாம் தூக்கி எறியும் மாதுளை தோல்களிலும் நம்பமுடியாத ஆரோக்கியமான நன்மைகள் உள்ளன.

மாதுளை பல்வேறு டூத் பேஸ்டுகளில் மிகவும் அத்தியாவசியமான பொருட்களில் ஒன்று. மாதுளை தோலில் வாய் சுகாதாரத்தை பராமரிக்க உதவும் பல பண்புகள் கொண்டது. 

மாதுளம்பழத்தோலை அரைத்து பொடி செய்து பின் தண்ணீருடன் சேர்த்து குடித்தால், வாய் துர்நாற்றம் வராமல் இருக்கும். மேலும் உங்கள் பற்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். 

மாதுளம்பழத்தின் தோல் எலும்புகளை மிகவும் வலுப்படுத்தவும் மற்றும் அதன் அடர்த்தியை அதிகரிக்கவும் சிறந்தது. 

இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் காரணமாக பருக்கள் போக்க மாதுளை பயன்படுகிறது. இது சருமத்தை இளமையாகவும் பொலிவாகவும் வைத்து கொள்ள உதவுகிறது, மற்றும் முகத்தில் சுருக்கங்களைத் தவிர்க்கிறது.

புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் மாதுளை தோல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஒரு ஆராய்ச்சியில்  கண்டறியப்பட்டுள்ளது.

Rupa

Next Post

11,000 ஊழியர்கள் நீக்கம்...! வாட்ஸ்அப் இந்தியாவின் அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்தார்...!

Wed Nov 16 , 2022
வாட்ஸ்அப் இந்தியா வின் தலைமை பொறுப்பாளர் பதவியிலிருந்து அபிஜித் போஸ் பதவி விலகி உள்ளார்.. இந்திய வாட்ஸ்அப் தலைவர் அபிஜித் போஸ் மற்றும் மெட்டா இந்தியாவின் பொதுக் கொள்கை இயக்குநர் ராஜீவ் அகர்வால் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பொதுக் கொள்கையின் இயக்குநரான ஷிவ்நாத் துக்ரால், தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து மெட்டா பிராண்டுகளுக்கான பொதுக் கொள்கை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். நினைவுகூர, மெட்டா சில […]

You May Like