fbpx

சித்தர்களின் அபூர்வ மூலிகை..! திக்குவாய் பிரச்சனையா இதை மட்டும் செய்தால் போதும் உடனே தீர்வு கிடைக்கும்..!

நம் தமிழ்நாட்டில் பல வகையான மூலிகைகளையும் அதன் மகத்துவங்களையும் நம் முன்னோர்கள் பாதுகாத்து வந்தனர். அந்த காலத்தில் உடலில் ஏற்பட்ட பல்வேறு வகையான நோய்களுக்கும் மூலிகை மருத்துவத்தையே பயன்படுத்தி நீண்ட ஆயுள் வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்போதுள்ள காலகட்டத்தில் மூலிகைகளை பயன்படுத்தி மருத்துவம் செய்வது குறைந்துவிட்டது.

அந்த காலத்தில் முன்னோர்கள் பயன்படுத்திய அரிய வகை மூலிகை தான் வசம்பு. இதை பெயர் சொல்லாதது என்று அழைக்கின்றனர். இந்த வசம்பில் அதிசயத்தக்க அளவில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. கார சுவையும், வெப்பத்தன்மையும் அதிகமுள்ள வசம்பை மிகவும் குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.

பிறந்து ஆறு மாதமான குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலி, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளுக்கு வசம்பை மிகவும் குறைந்த அளவில் அரைத்து சுடு தண்ணீரில் கலந்து குழந்தைகளின் குடிக்க கொடுத்து வந்தால் இப்பிரச்சனை உடனடியாக சரியாகும். மேலும் பெரியவர்களும் வசம்பை வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு மருந்தாக எடுத்துக் கொள்ளலாம்.

விஷம் அருந்தியவர்களுக்கு வசம்பை பொடி செய்து சாப்பிட கொடுத்தால் விஷம் உடனடியாக உடலை விட்டு வெளியேறிவிடும். வசம்பை சுட்டு கரியாக்கி தேனில் கலந்து குழந்தைகளின் நாக்கில் வைத்து விட்டால் திக்குவாய் இருக்கும் குழந்தைகள் நன்றாக பேச ஆரம்பிப்பார்கள். கருவேப்பிலை, மஞ்சள், சுடு தண்ணீர் இவற்றுடன் வசம்பையும் சிறிதளவு அரைத்து அடிபட்ட இடத்தில் வைத்து வந்தால் நல்ல கிருமி நாசினியாக செயல்பட்டு புண்களை உடனே ஆற வைக்கும். இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய வசம்பு அதிக அளவு எடுத்துக் கொள்ளக் கூடாது. அவ்வாறு எடுத்துக் கொண்டால் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

Baskar

Next Post

குரூப் 4 தேர்வுக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 ஆக நிர்ணயம்...! 12-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்...!

Sun Feb 4 , 2024
வி.ஏ.ஒ., இளநிலை உதவியாளர் உட்பட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பை இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்.28ம் தேதி கடைசி நாள் ஆகும். தேர்வுக்கு tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஜூன் 9-ம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. வனக் காவலர், ஓட்டுநர் […]

You May Like