வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக கிராமப்புற இளைஞர்களின் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்குடன், தமிழக அரசு 2025-2026 ஆம் ஆண்டுக்காக புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘முதல்வரின் உழவர் நல சேவை மைய திட்டம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், வேளாண் துறை சார்ந்த தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. கரூர் மாவட்டம் முழுவதும் இந்தப் புதிய திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. […]

இன்று காலை கொல்வெஸி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ரன் வேயில் இருந்து சறுக்கிய ஒரு பட்டய விமானம் தீப்பற்றி எரிந்த சம்பவம் காங்கோவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. காங்கோ ஜனநாயக குடியரசின் சுரங்கத்துறை அமைச்சர் லூயிஸ் வட்டும் கபாம்பா மற்றும் அவரது குழுவினர் அந்த விமானத்தில் இருந்தனர்.. விமானத்தின் பின்புறம் முழுவதும் சில விநாடிகளிலேயே தீ பரவத்தொடங்கியது.. எனினும் அனைத்து பயணிகளும் தீப்பரவுவதற்கு முன்பே உடனே வெளியேறி உயிர் […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (SIR) கைவிடக் கோரி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், நேற்று முன்தினம் (நவம்பர் 16) சென்னையில் போராட்டம் நடைபெற்றது. சென்னை திருவல்லிக்கேணி, சுவாமி சிவானந்தா சாலையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில், தவெக-வின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மைப் பிரிவுப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உட்பட பல முக்கிய […]

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கும், வைலாமுர் கிராமத்தை சேர்ந்த 25 வயது இளைஞருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணமான இரண்டரை மாதத்தில், புதுமணப்பெண் தனக்கு வயிற்று வலிப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து, கணவர் அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அந்தப் பெண் 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள் […]

ராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு சமூக நீதி மாணவர் விடுதியில், 8-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் சக மூத்த மாணவர்களால் ஜாதி ரீதியிலும், மனரீதியிலும், உடல்ரீதியிலும் கடும் சித்திரவதைக்கும் பாலியல் தொல்லைக்கும் ஆளாக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த முனியப்பனின் மகன் ஹரி பிரசாந்த் (13) என்ற அந்த சிறுவன், விடுதியில் தங்கிய நாள் முதல் இந்தப் பயங்கர கொடுமைகளை சந்தித்து வந்துள்ளான். விடுதியின் […]

சவுதி அரேபியாவில் நடந்த துயரமான பேருந்து விபத்து, உலகளவில் ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரைகளின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் மெக்காவிற்கு பயணம் செய்கிறார்கள், சிலர் தங்கள் மதக் கடமைகளை நிறைவேற்றவும், மற்றவர்கள் ஆன்மீக ஆறுதலைக் காணவும். முஸ்லிம் சமூகம் இந்த புனித யாத்திரைகளைப் பற்றி அனைத்தையும் அறிந்திருக்கலாம், ஆனால் மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். ஹஜ் மற்றும் உம்ராவிற்கு என்ன […]