fbpx

வெள்ளை மஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா…..? இது வரைக்கும் இத பத்தி யாருமே சொல்லலயே….!

பொதுவாக மஞ்சள் என்றாலே, மருத்துவ குணம் மிக்கது என்று சொல்லப்படுவது வழக்கம். மேலும், அதன் நிறமே மங்களகரமாக இருக்கும் என்றும் சொல்வார்கள்.

ஆனால், மஞ்சள் என்றாலே அது மஞ்சள் நிறத்தில் தான் இருக்கும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இருந்தபோதிலும், வெள்ளை நிறத்தில் இருக்கின்ற மஞ்சள் கசப்பு சுவையுடன், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் தன்னுள் கொண்டிருக்கிறது. அது பற்றி தற்போது நாம் பார்க்கலாம்.

இஞ்சி மஞ்சள் போன்ற தோற்றத்தை கொண்டுள்ள வெள்ளை மஞ்சள், புலாங்கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது. வெள்ளை மஞ்சள் மூட்டுகளில் இருக்கின்ற கூடுதலான திரவங்களை நீக்கி, கீழ்வாத பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

அத்துடன், இதில் உள்ள குர்குமெனாலின் காரணமாக, வலி நிவாரணியாகவும் இது திகழ்கிறது. அத்துடன், காயத்தை குணப்படுத்தவும் உதவியாக உள்ளது. இந்த வெள்ளை மஞ்சள் பல செரிமான கோளாறுகள் மற்றும் குடல் புன்னை தடுக்கும் இயற்கை குணத்தை கொண்டு இருக்கிறது.

இதிலுள்ள குர்குமின் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து, புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது. வெள்ளை மஞ்சள் இருக்கின்ற ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், உடலுக்கு எதிர்ப்பு சக்தியை வழங்க கூடியதாகும்.புலாங்கிழங்கு முகத்தில் உண்டாகும் பாரு, கரும்புள்ளிகள் உள்ளிட்டவற்றை போக்க உதவியாக இருக்கும்.

Next Post

என்ன குளிர் பானங்கள் தாகத்தை அதிகரிக்குமா…..?

Sat Aug 12 , 2023
பொதுவாக குளிர்பானங்கள் என்பது வெயில் காலத்தில் பொதுமக்களின் தாகத்தை தணிப்பதற்காகவும், உடலில் குளிர்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காகவும் அருந்தப்படுவது. ஆனால், வெயில் அதிகமாக இருக்கின்ற சூழ்நிலையில், மக்கள் பலரும் கார்பனேற்ற பாட்டில் குளிர்பானங்களை வாங்கி சாப்பிடுகிறார்கள். இருந்தாலும், இந்த கார்பனேற்ற பானங்களை அதிகம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து என்று கூறப்படுகிறது. குளிர்பானங்களில், இருக்கின்ற கார்போனிக் ஆசிட் என்பது நாவில் உண்டாக்கும் சென்சேஷன் தொடர்ந்து, அந்த பானங்களுக்கு அடிமையாக்கி விடும் என்று சொல்லப்படுகிறது. […]

You May Like