பெங்களூரைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், செலவழிக்க பணம் இருந்தும், எப்படி செலவழிப்பது என தெரியாமல் ஆலோசனை கேட்டு சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.
பெங்களூருவை சேர்ந்த கணவன்-மனைவி இருவரும் மென்பொருள் பொறியாளர்களாகப் பணிபுரிகின்றனர், மேலும் இரட்டை வருமானம் கிடைக்கிறது. ஆனால் இருவருக்கும் குழந்தைகள் இல்லை. அவர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் சம்பளத்தில் கணிசமான பகுதியைச் சேமிக்கிறார்கள். வாழ்க்கைச் செலவுகள், கார் பராமரிப்பு மற்றும் இதர செலவுகள் என கணக்கு போட்டாலும், அவர்களின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ.3 லட்சத்துக்கு மேல் மீதம் உள்ளது.
தங்களின் உபரி வருமானத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த ஆலோசனைகளைத் தேடி, அந்த நபர் கிரேப்வைனில், அனைத்து பணத்தையும் என்ன செய்வது என்று தெரியவில்லை என பதிவிட்டுள்ளார். கிரேப்வைனில் என்பது, இந்திய தொழில் வல்லுநர்கள் சம்பளம், பணியிடங்கள் மற்றும் நிதி பற்றி விவாதிக்கும் ஒரு தளம் ஆகும்.
தம்பதி வெளியிட்டுள்ள பதிவில், “எங்களின் மாத வருமானம் 7 லட்சம். வருடாந்திர போனசும் உண்டு. அதில் இருந்து ரூ.2 லட்சத்தை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்கிறோம். எங்களின் வாழ்க்கைச் செலவுகள் மாதத்திற்கு சுமார் ரூ.1.5 லட்சம் வரை செலவாகிறது. இதர செலவுகள் என கணக்கு போட்டாலும், மாதம் குறைந்தது 3 லட்சத்திற்கு மேல் மீதம் வருகிறது. அந்த பணத்தை எப்படி செலவு செய்வது?” என ஆலோசனை கேட்டுள்ளார்.
தம்பதியின் அந்த இடுகையின் ஸ்கிரீன் ஷாட்டை கிரேப்வைனின் நிறுவனர் சவுமில் திரிபாதி X இல் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவிற்கு பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ((வாசகர்களாகிய உங்களின் இவ்வளவு பணம் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை கருத்துப் பெட்டியில் பதிவிடவும்))
Read more ; பிஃஎப் பயனாளிகளுக்கு பண மழை கொட்டப் போகுது..!! சூப்பர் அறிவிப்பு வெளியீடு..!!