கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சினைகள் வருவதற்கு காரணம், அவர்களுக்கிடையே சரியான புரிதலும் அன்னியோன்யமும் இல்லாதது தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அப்படி சரியான புரிதலும், அன்னியோன்யமும் இருந்தால் நிச்சயம் ஒரு தம்பதிகளுக்கு இடையே பெரிய அளவில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பில்லை. அப்படி வந்தாலும் பாதிக்கபட்சம் ஒரு மணி நேரத்திலேயே அந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும்.
அந்த வகையில், கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த விஜய்குமார் – புஷ்பா தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு 26 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இருவருக்கும் இடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இதனால் இருவரின் வீட்டாரும் சமாதானம் செய்து வைத்ததாக தெரிகிறது. சமீபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் தனித்தனியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில், சென்ற 28ஆம் தேதி மாலை 4 மணி அளவில் விஜயகுமார், புஷ்பாவின் வீட்டிற்கு சென்று வாதம் செய்துள்ளார். அப்பொழுது இருவருக்கும் மாறுபடியும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரம் கொண்ட விஜயகுமார், மனைவி புஷ்பாவின் கைவிரலை கடித்து, மென்று துப்பியதாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக, பயங்கர வலி ஏற்பட்டதால், புஷ்பா கதறி துடித்தார். இதனைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் புஷ்பாவின் கதறலை கேட்டு, ஓடி வந்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக புஷ்பா காவல் நிலையத்தில் வழங்கிய புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கணவரை கைது செய்துள்ளனர்.